செல்லாது, செல்லாது, ஏத்துக்க மாட்டோம்: வனிதாவால் பிக் பாஸை விளாசும் பார்வையாளர்கள்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 58 : Losliya-வின் உண்மையான முகம்- வீடியோ

சென்னை: வனிதாவால் பிக் பாஸை பார்வையாளர்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் அவரை ஒயில்டு கார்டு மூலம் அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்தார்கள்.

வனிதா அக்கா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று கூறி அதை ட்விட்டரில் எல்லாம் டிரெண்டாக்க விட்டார்கள் பார்வையாளர்கள்.

வனிதா

வனிதா

வெளியே சென்ற வேகத்தில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் விருந்தாளியாக வந்திருக்கிறார் என்று நினைத்த நிலையில் அவர் ஒயில்டு கார்டு என்ட்ரி என்று நேற்று இரவு கூறி பார்வையாளர்களை அதிர வைத்துள்ளார் பிக் பாஸ். பிக் பாஸின் இந்த செயலால் பார்வையாளர்கள் செம கடுப்பில் உள்ளனர். வனிதா திரும்பி வர வேண்டும் என்று விரும்பியர்களுக்கே அவர் வந்தது பிடிக்கவில்லை.

ஒயில்டு கார்டு

ஒயில்டு கார்டு

எங்க வனிதா அக்காவை ஒயில்டு கார்டு மூலம் அழைத்து வாங்க என்று பார்வையாளர்கள் கேட்டதை தான் பிக் பாஸ் செய்துள்ளார். அப்படி இருந்தும் பார்வையாளர்கள் பிக் பாஸை கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். வெளியேற்றப்பட்ட ஒரு ஆள் எப்படி போட்டியாளராக மீண்டும் வர முடியும் என்று கேட்டு கெட்ட, கெட்ட வார்தையால் பிக் பாஸை திட்டுகிறார்கள் பார்வையாளர்கள்.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

வனிதா ஒயில்டு கார்டு என்ட்ரி என்பதை ஏற்கவே முடியாது. இது நியாயம் அல்ல. அப்படி என்றால் சித்தப்பு, பாத்திமா பாபு ஆகியோரையும் ஒயில்டு கார்டு மூலம் அழைத்து வர வேண்டியது தானே. இது போங்கு ஆட்டம் பிக் பாஸ். ஒழுங்காக வனிதாவை உடனே வீட்டை விட்டு விரட்டிவிடுங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

விதி மீறல்

விதி மீறல்

பார்வையாளர்களை ஏமாற்றி வேடிக்கை பார்ப்பதே இந்த பிக் பாஸுக்கு வேலையாகிவிட்டது. வனிதா அப்படி என்ன செய்தார் என்று விதிகளை மீறி அவரை ஒயில்டு கார்டாக அழைத்து வந்துள்ளார் பிக் பாஸ். சீசனுக்கு சீசன் ஒரு செல்லக்குட்டியை தேர்வு செய்து அவரை காப்பாற்றி தில்லாலங்கடி வேலை செய்வதே இந்த பிக் பாஸுக்கு வழக்கமாகிவிட்டது என்று விமர்சனம் எழுந்துள்ளது. உங்களின் இஷ்டப்படி அனைத்தையும் செய்வதற்கு பார்வையாளர்களை எதற்காக ஓட்டு போடச் சொல்ல வேண்டும். எங்களை பார்த்தால் முட்டாள் மாதிரி தெரிகிறதா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X