இத்தனை நாட்கள் புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா பிக் பாஸ்?
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்த சரவணன் தான் கல்லூரியில் படித்த காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாக அதுவும் கமல் ஹாஸனிடமே தெரிவித்தார். அதை கேட்டு கமல் கண்டிக்கவில்லை, அரங்கில் இருந்த பார்வையாளர்களோ கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
சரவணின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாடகி சின்மயி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி சேனலை விளாசினார். இந்நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீர் என்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

சரவணன்
பெண்களை சீண்டிய பிரச்சனை பூதாகரமாக வெடித்த பிறகு தான் சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் சேரன், சரவணன் இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. டிவியில் அதை காட்டவில்லை. அதற்கும் சேர்த்து தான் சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சரவணனை தாமதமாக வெளியேற்றியுள்ளதாகக் கூறி பிக் பாஸை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிப்பு
பிக் பாஸ் சரவணன் கமலிடம் தெரிவித்ததை கவனிக்காதது போன்று நடித்துவிட்டு தற்போது பிரச்சனை பெரிதான பிறகு அவரை வெளியேற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரவணன் கமலை பற்றி இவன் கோர்த்துவிடப் பார்க்கிறான் என்று மரியாதை இல்லாமல் பேசியதற்காக வெளியேற்றப்பட்டார் என்றால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரியாகிவிடுமா?
பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுவிட்டு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சேரனின் ஆதரவாளர்களோ சரவணன் வெளியேற்றப்பட்டதால் இனி வீடு நன்றாக இருக்கும். சேரனுக்கு நிம்மதி என்று தெரிவித்துள்ளனர். மேலும் சாண்டி மாஸ்டர் இனி சுயமாக சிந்தித்து செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளனர்.

சாண்டி
சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று பிக் பாஸ் கூறியதும் சாண்டி, கவின், மதுமிதா ஆகியோர் கதறி அழுதது எல்லாம் ரொம்ப ஓவர். பார்வையாளர்களில் சிலருக்கு சரவணனை வெளியேற்றியது பிடிக்கவில்லை. சித்தப்பு தான் நான் தவறு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும் இப்படி செய்துள்ளது நியாயம் இல்லை என்கிறார்கள். சித்தப்பு வெளியேற்றப்பட்டதற்கு சின்மயி தான் காரணம் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











