பலிகடா ஆக்கப்பட்டாரா வனிதா?: கடைசியில் நம்மையே அழ வச்சுட்டாரே!

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 21 Highlights : வனிதா வெளியேற இதுதான் காரணமா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை வனிதா விஜயகுமாரை திட்டியவர்கள் எல்லாம் தற்போது அவரை பாராட்டுகிறார்கள்.

பிக் பாஸ் 3 வீட்டில் கடைசி வாரம் வரையாவது இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் வனிதா விஜயகுமார். ஆனால் இரண்டாவது ஆளாக நேற்று அவர் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்தபோது அவரை சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் முழுநேரமாக திட்டித் தீர்த்தார்கள்.

வனிதா

வனிதா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் கிடைத்த உடனேயே பார்வையாளர்களுக்கு கவலை வந்துவிட்டது. 3 வாரங்களாக அவரை திட்டியவர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்று பிக் பாஸிடம் கோரிக்கை விடுத்தார்கள். மேலும் வனிதா பற்றி நல்லவிதமாக பேசத் துவங்கிவிட்டனர்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

வனிதா பார்வையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தது தெரியாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் அவரை பற்றி கமலிடம் கருத்து தெரிவித்தார்கள். ரேஷ்மா, வனிதா குழந்தைகளுக்காக இருக்கும் ஒரு தாய், தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மகள், தனியாக இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு சொந்தக் காலில் நின்று போராடும் ஒரு பெண் என்று கூறினார். இதை கேட்டு வனிதா கண் கலங்க அவரை பார்த்து பார்வையாளர்கள் கண் கலங்கியது தான் நம்ப முடியாத விஷயம். ஆனால் இது தான் உண்மை.

பாசம்

பாசம்

வனிதா மீது பார்வையாளர்களுக்கு இருந்த கோபம் சுத்தமாக போய்விட்டது என்று கூறவில்லை. ஆனால் கோபம் குறைந்து அவர் மீது பாசம் வந்துவிட்டது. தனியாக போராடும் பெண் என்று பாராட்டு வாங்கிவிட்டார் வனிதா. வனிதா என்ன தான் கத்தினாலும், கதறினாலும், சண்டை போட்டாலும் அவர் இருந்ததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும்படி இருந்தது. இனி நான் பிக் பாஸ் பார்க்க மாட்டேன் என்று நேற்று இரவு முடிவு செய்தவர்கள் ஏராளம்.

குடும்பம்

குடும்பம்

வாழ்க்கை குறித்து வனிதா கூறியது பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் பிரச்சனை வந்துவிட்டால் நம் சுயநலத்திற்காக தற்கொலை செய்யக் கூடாது என்று வனிதா கூறியது பாராட்டுக்குரியது. இவ்வளவு மெச்சூராக இருக்கும் வனிதாவை பிக் பாஸ் வீட்டில் ஏன் வேறு மாதிரியாக காட்டினார்கள் என்ற கேள்வி தான் எழுகிறது. (டி.ஆர்.பி.க்காக வனிதாவை வேறு மாதிரியாக காட்டி பலிகடா ஆக்கிவிட்டார்களோ?) எது எப்படியோ, வெளி உலகத்தில் தனியாக போராடும் வனிதாவுக்கு வாழ்த்துகள் வந்து குவிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X