Bigg Boss 3 கமல் நேற்று தானே சொன்னார், அதற்குள் நடந்துடுச்சே

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் தமிழ் பொண்ணு பிரச்சனை வெடித்த பிறகு மதுமிதா அழுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை பார்க்கவே கடுப்பாக உள்ளது. சும்மா சும்மா யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள். ஒன்று கோபமாக பேசுகிறார்கள். இல்லை என்றால் அழுது கொண்டிருக்கிறார்கள். உங்களின் ஸ்க்ரிப்ட்டில் தீயை வைக்க பிக் பாஸ் என்று நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மேலும் ஒரு அழுகாச்சி ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல் ஹாஸன்

தமிழ் பொண்ணு பிரச்சனையை கிளப்பிய மதுமிதாவை பார்த்து வனிதா நானும் உன்னை விட தமிழ் பொண்ணு தான், உனக்கு முன்னாடி தமிழ் பொண்ணு என்று திட்ட அவர் கண் கலங்குகிறார். இதை பார்த்த கமல் ஹாஸனோ, எப்படி இருந்த வீடு இப்படி ஆகிவிட்டதே என்று பார்வையாளர்களை பார்த்து கூறுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வனிதா

பிக் பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் வனிதா மூக்கை நுழைக்கிறார். ஒரு வேளை எது நடந்தாலும் அதில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் வனிதாவிடம் கூறியிருப்பாரோ?. இருப்பினும் இந்த ப்ரொமோ வீடியோவை நம்ப முடியாது. இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மை என்னவென்பது தெரியும்.

ரசம்

நேத்து தான் ஆண்டவர் சொன்னாரு உங்க கிட்ட பல ரசத்தையும் எதிர் பாக்குறோம்னு 😂
இன்னைக்கு ரசம் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு 😂
#BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

கவின்

கிடைக்கும் பெண்களிடம் எல்லாம் கடலை போடும் கவினை நம்பாதீங்க, அவரிடம் இருந்து தள்ளியே இருங்க என்று லாஸ்லியாவின் ஆதரவாளர்கள் அவரை தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஃபுல் டைம் கடலை போடுவதற்காகவே கவின் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் கவினை முதல் ஆளாக வெளியேற்றுமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X