அமீர் போட்டது ஆட்டம் இல்லை திட்டம்… டான்ஸ் இல்ல உடான்ஸ்.. வம்பிழுத்த ஹவுஸ்மெட்ஸ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் தற்போது பேசு பொருளாக இருப்பது பாவ்னி தான். என்னிடம் யாரும் பேசுவது இல்லை நான் தனியாக இருக்கிறேன் என்று கூறிக்கொண்டு எப்போது பார்த்தாலும் அபிநய் உடனே ஜோடி போட்டு திரிந்தார்.
இதைப்பார்த்த ராஜு ட்ரூத் ஆர் டேர் கேமில், அபிநயிடம் நீ பாவ்னியை லவ் பண்றியா என்று கேட்டார். இது வீட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராஜு கேட்டதற்கு பிறகு தான், ஓ இது எல்லாம் நடக்குதா, நமக்கு தெரியாமல் போச்சே என்று நேயர்கள் அன்கட் சீனையும் விடாமல் பார்த்து வருகின்றன.

பாவ்னி அமீர்
ராஜுவின் கேள்வியை அடுத்து அபிநய்யுடன் பேசுவதை தவிர்த்து விட்டு புதுவரவான டான்ஸ் மாஸ்டர் அமீருடன் அதிக நேரம் பேசி வருகிறார். பாதி நேரம் அமீர் என்ன பேசுகிறார் என்பதே தெரியவில்லை, முனுமுனு என்று வாய் அசைவது மட்டும்தான் கேட்கிறார்.

என்னடா நடக்குது அங்க
பல நேரங்களில் அமீர் பாவ்னியை அடித்து விளையாடுவதும், பாவ்னி அமீரை துரத்தி சென்று அடிப்பதும், பார்ப்பதற்கே என்னடா நடக்குது அங்க என கேட்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சியை பார்க்கும் நமக்கே இப்படி இருக்குனா போட்டியாளர்கள் மனநிலை எப்படி இருக்குமோ.

செம கலாய்
இந்நிலையில், பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள், அமீர் மற்றும் பாவ்னியின் நட்பு குறித்து பாட்டுப்பாடி கலாய்த்தனர். அதோடு விடுவாங்கள் என்று பார்த்தா, இன்னும் இருக்குடா தம்பி கேளு என்பது போல, அப்போ அமீர் போட்டது ஆட்டம் இல்லை திட்டம்... டான்ஸ் இல்ல உடான்ஸ் என பிரியங்கா அமீரை சரமாரியாக கலாய்த்தார். அமீர் மற்றும் பாவ்னியின் நட்பு பொய் என ஒரே அடியாக ஒரு போடுபோட்டனர்.

ஒரு வாரம் கூட ஆகல
இதையெல்லாம் கேட்டு அமீருக்கு ஆத்திரம் வந்தாலும், டாஸ்க் என்பதால் வேற வழியில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். நெட்டிசன்களும் வந்து ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள அமீர் பேரை கெடுத்துக்கொண்டார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











