BB 7 show: ரேகாவிற்கு கமல் செய்தது நியாயமா.. நேரடியாக குற்றம் சாட்டிய யுகேந்திரன் மனைவி!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது.

கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டு இன்றைய தினம் 35வது நாளை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நுழைந்துள்ளனர்.

Bigg boss 7 contestant yugendran wife direct attack to Kamal haasan on Pradeep elimination

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே நடிகர் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்து வருகிறார். தற்போது 7வது சீசனில் இந்த நிகழ்ச்சி நடைபோட்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

வைல்ட் கார்ட் என்ட்ரி: இந்நிலையில் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 34வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரதீப் உள்ளிட்ட 6 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா, கானா பாலா உள்ளிட்ட 5 பேர் என்ட்ரி கொடுத்துள்ளனர். நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி களைகட்டி வரும் நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர்.

பிரதீப் எலிமினேஷன்: இந்நிலையில் நிகழ்ச்சியின் துவக்கம் முதலே போட்டியாளர் பிரதீப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சக போட்டியாளர்களிடம் ஏகத்திற்கும் வம்பிழுத்து, பல விஷயங்களில் சிக்கி வந்தார். இவரது செயல்பாடுகள் பல சமயங்களில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இவருக்கு ரெட் கொடுத்த கமல்ஹாசன் இவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

கமல் விளக்கம்: முன்னதாக இவரை எலிமினேட் செய்வது குறித்து சக போட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், அதிகமானவர்கள் பிரதீப்பிற்கு எதிராகவே ரெட் கார்ட் கொடுத்தனர். பெண்களுக்கு இவரால் பாதுகாப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. இதே காரணத்தை குறிப்பிட்டு கமல்ஹாசனும் பிரதீப்பிறகு ரெட் கொடுத்து எலிமினேட் செய்துள்ளார். தன்னுடைய முடிவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

விமர்சனங்களை ஏற்படுத்திய முடிவு: இந்நிலையில் கமலின் இந்த செயல்பாடு பல்வேறு தரப்பினரிடையேயும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து கடந்த வாரத்தில் எலிமினேட் ஆன யுகேந்திரனின் மனைவியும் இந்த விவகாரத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். பெண்களை காரணம் காட்டி இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்பை வெளியேற்றியுள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுகேந்திரன் மனைவி கேள்வி: முன்னதாக புன்னகை மன்னன் படத்தில் நடித்த 16 வயதான நடிகை ரேகாவிற்கு தெரியாமல் கமல்ஹாசன் லிப் கிஸ் செய்ததாக பரவலாக பேசப்படுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கமல் நடித்த முக்கால்வாசி படங்களில் லிப்லாக் இல்லாமல் இருக்காது என்றும் தெரிவித்துள்ள யுகேந்திரனின் மனைவி, பெண்களுக்காக பெண்கள் உரிமைக்காக கமல் பேசுவதாக கூறுவது தனக்கு புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X