Saravana Vikram: ஜில்.. ஜங்.. ஜக்.. பிக்பாஸ் 7 பெண் போட்டியாளர்களுடன் கிளம்பிய சரவண விக்ரம்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் சாதுவான கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தவர் சரவண விக்ரம். இந்த சிரியலின் இறுதி நாட்களில் இவர் காணப்படவில்லை. மாறாக பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் முதல் 18 போட்டியாளர்களில் ஒருவராக என்ட்ரி கொடுத்திருந்தார். நிகழ்ச்சியில் அதிகமான மெனக்கெடல்கள் இல்லாமலேயே டைட்டில் வின்னர் என்ற பாராட்டுக்கு உள்ளான இவர், தொடர்ந்து நிகழ்ச்சியில் 80 நாட்கள் தாக்கு பிடித்தார். தொடர்ந்து கடந்த வாரத்தில் எலிமினேட் ஆன இவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

சின்னத்திரை நடிகராக இருக்கும் சரவண விக்ரமிற்கு சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்ற விருப்பம் இருந்து வருகிறது. இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடமே சொல்லி அசத்தினார். கமலை விட அதிகமாக வரவேண்டும் என்ற ஆசையை அவர் எலிமினேட் ஆகும் முன்பு கமலில் தெரிவித்தார். பல முன்னணி நடிகர்களின் சினிமா டயலாக்குகளை ரீ -கிரியேட் செய்து வீடியோக்களாக தொடர்ந்து வெளியிட்டு வந்த சரவண விக்ரமிற்கு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

Bigg boss 7 eliminated contestant Saravana vikram met his co contestants

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் இன்னும் சில தினங்களில் எண்ட் கார்ட் போடவுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி 95வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த எவிக்ஷன், டபுள் எலிமினேஷன், வைல்ட் கார்ட் என்ட்ரி என களைகட்டி தற்போது 8 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

பணப்பெட்டி குறித்த கேள்வி: இந்த பணப்பெட்டியை யார் தூக்கிக் கொண்டு போவார்கள் என்பதாக இன்றைய பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. மேலும் விசித்ராவும், அர்ச்சனாவும் கருத்து மோதலை அரங்கேற்றியதை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் துவக்க போட்டியாளராக நிகழ்ச்சியில் இணைந்தவர் சரவண விக்ரம். நிகழ்ச்சியில் அனைவரும் ஆளுக்கு ஆள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நிலையில், சாந்தமாகவே நிகழ்ச்சியில் 80 நாட்கள் தாக்கு பிடித்தார் சரவண விக்ரம். இவர்தான் டைட்டில் வின்னர் என்பது போல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் இவர் எலிமினேட் ஆனார்.

பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த விக்ரம்: இந்நிலையில் தற்போது வெளியில் வந்துள்ள சரவண விக்ரம் தொடர்ந்து பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் முன்னதாக எலிமினேட் ஆகி வெளியில் உள்ள போட்டியாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அக்ஷயா, ஜோவிகா உள்ளிட்டவர்கள் சந்தித்துள்ள சரவண விக்ரம், அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவர்கள் மூவரும் வெளியூருக்கு செல்லும்படியான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனிடையே, அனன்யா, நிக்சனுடன் சரவண விக்ரம் இருக்கும்படியான புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

Bigg boss 7 eliminated contestant Saravana vikram met his co contestants

கமலாக மாற விருப்பம்: முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவந்த சரவண விக்ரம், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பல ஸ்கிரீன் வீடியோக்களை ரீ கிரியேட் செய்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வந்தார். அந்த வகையில் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தின் காட்சியையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக இவர் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தான் எலிமினேட் ஆனபோதிலும் கமலை போல வரவேண்டும் என்ற தன்னுடைய லட்சியத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இவரது எலிமினேஷன் நடந்துள்ளது. அதிகமாக மெனக்கெடாமல் 80 நாட்களை இவர் பிக்பாஸ் வீட்டில் கழித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X