Jovika: பார்த்திபனிடம் உதவி இயக்குநர்.. அடுத்தக்கட்டத்துக்கு தயாராகும் ஜோவிகா!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக ஆடிவந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

Bigg boss 7 famous Jovika joined with Director Parthibans Assistant director it seems

நிகழ்ச்சியில் தன்னுடைய அம்மா வனிதா விஜயகுமாரை போலவே தன்னுடைய கருத்துக்களை மிகவும் போல்டாக பேசிவந்தார் ஜோவிகா.

நடிகை வனிதா விஜயகுமார்: நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்றவற்றில் பங்கேற்று மிகச்சிறப்பாக ஆடிவந்தார். மேலும் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவர், அந்த நிகழ்ச்சியில் தன்னால் தொடர முடியாது என்று கூறி இடையிலேயே விலகினார். இதனால் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சிகளின்மூலம் வனிதாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

வனிதா மகள் ஜோவிகா: இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா பங்கேற்றார். கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், 18 போட்டியாளர்களில் ஒருவராக ஜோவிகாவும் இணைந்தார். அவர் இந்த நிகழ்ச்சியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். மேலும் கல்வி குறித்த விசித்ராவுடன் அவரது வாக்குவாதங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

போல்டான ஜோவிகா: தொடர்ந்து நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்துக்களை போல்டாக பேசி ரசிகர்களை கவர்ந்த ஜோவிகா, கடந்த வாரத்தில் எலிமினேட் ஆகியுள்ளார். இந்நிலையில் ஜோவிகாவின் அடுத்த பிளான் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இயக்குநர் பார்த்திபனிடம் துணை இயக்குநராக இணைந்துள்ளார் ஜோவிகா. இதனால் அவர் அடுத்ததாக இயக்குநராக மாறுவாரா அல்லது தன்னுடைய அம்மா போல நடிகையாக மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக சம்பளம்: இன்றைய தினம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 64வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பங்கேற்று வந்த ஜோவிகா நிகழ்ச்சியில் தொடர்ந்து 60 நாட்களை கடந்து இருந்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக அவர் அதிகளவில் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு ஒரு வாரத்திற்கு 2 லட்சம் சம்பளமாக பேசப்பட்ட நிலையில் அவர் 10 வாரங்களை தாண்டி இருந்ததால் 20 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பார்த்திபனிடம் உதவி இயக்குநர்: இந்த சிறிய வயதில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமாகியுள்ளார். மேலும் அடுத்ததாக சினிமாவிலும் அவர் தனது கனவை நோக்கி அடுத்தக்கட்ட பயணத்தை துவங்கியுள்ளார். விரைவில் அவரை சினிமாவில் சிறப்பான ரோலில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட ஜோவிகா தற்போது நேரலையில் தன்னுடைய அம்மாவுடன் அமர்ந்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X