Bigg boss 7: இந்த அவமானம் எனக்கு தேவையா.. மாயாவை அலேக்காக தூக்கிவந்த அர்ச்சனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது.
ஒருபுறம் இந்த நிகழ்ச்சி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்டு டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் எவிக்ட் ஆகிவரும் சூழலில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக 7 பேர் நுழைந்துள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நிகழ்ச்சியிலிருந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில் விஜய் வர்மா மற்றும் பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: இதில் பிரதீப்பின் எலிமினேஷன் அதிகமான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உண்டு செய்தது. இந்நிலையில் விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவரும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் கடந்த வாரம் நுழைந்துள்ளனர். முன்னதாக தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர். 5 பேர் நுழைந்த நிலையில் 3 பேர் அதில் எலிமினேட் ஆகியுள்ளனர். நிகழ்ச்சியில் விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையில் தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
பாராட்டிய ஹரீஷ் கல்யாண்: நித்தம் ஒரு டாஸ்க், விவாதங்கள், பிரச்சினைகளுடன் நடைபோட்டு வருகிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண், அவரது பார்க்கிங் பட பிரமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்த நிலையில், இந்த சீசனில் நிகழ்ச்சி மிகவும் டஃப்பாக இருப்பதாகவும் போட்டியாளர்கள் இதுவரை வந்ததே மிகப்பெரிய விஷயம் என்றும் கைத்தட்டலுடன் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.
61வது நாள் நிகழ்ச்சி: இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 61வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் நிகழ்ச்சியின் இன்றைய டாஸ்க் குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஒவ்வொரு போட்டியாளரும் போடியம்மில் வந்து நிற்க வேண்டும் அவருக்கு மற்ற போட்டியாளர்கள் கைத்தட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புத்தம் புதிய டாஸ்க்: இதில் விக்ரம் போடியம்மில் நிற்க ஒருவரும் சியர்ஸ் செய்யாத நிலையில், அடப்பாவிகளா ஒருத்தராவது கைத்தட்டுங்கடா என்று அவர் அப்பாவித்தனமாக கேட்கிறார். தொடர்ந்து மாயா போடியம்மில் நிற்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறார். எல்லாரும் சேர்ந்து தன்னை அவமானப்படுத்துவீர்கள் என்று அவர் கூற, அவரை அர்ச்சனா குண்டுகட்டாக தூக்கிவந்து போடியம்மில் நிறுத்துவதாக தற்போது இரண்டாவது பிரமோவில் காணப்படுகிறது. இந்த டாஸ்க்கின் முடிவையொட்டி நிக்சன் தினேஷிடம் சண்டை பிடித்ததையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











