Bigg Boss 7 Tamil: பூர்ணிமாவுடன் விஷ்ணு லவ்வா? தொட்டாச்சிணுங்கி என கமெண்ட் செய்த விஷ்ணுவிற்கு அர்ச்சனா பதிலடி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது.
கடந்த மாதம் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 54வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

நிகழ்ச்சி அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள், சண்டைகள், விவாதங்கள், அடிதடிகள், சச்சரவுகள் என தொடர்ந்து வருகிறது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக கடந்த 2017ம் ஆண்டு முதல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 54வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக 7வது சீசனிலும் தொடர்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
ஆங்கர் கமல்ஹாசன்: இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை களமிறக்கி வெற்றி கண்டது சேனல். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஆங்கராக கமல்ஹாசனே தொடர்ந்த நிலையில் சில தினங்களில் அவர் மற்ற கமிட்மெண்ட்கள் காரணமாக வெளியேறினார். தொடர்ந்து நடிகர் சிம்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சிக்காக 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
54வது நாளில் என்ட்ரி: இன்றைய தினம் நிகழ்ச்சி 54வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த 2 ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கேப்டன்சி டாஸ்கிற்காக நடத்தப்பட்ட போட்டியின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த டாஸ்கில் பெட்டியிலிருந்து எழுத்துக்களை எடுத்துவந்து கேப்டன் என்று பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் விஷ்ணு, ஜோவிகா மற்றும் நிக்சன் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் இதில் தோற்றதையடுத்து ஜோவிகா கதறியழுததை பார்க்க முடிந்தது.
தொட்டாச்சிணுங்கி என கமெண்ட்: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் அர்ச்சனாவை தொட்டாச்சிணுங்கி என்று விஷ்ணு கமெண்ட் செய்ததை பார்க்க முடிந்தது. இதையடுத்து அவரிடம் அர்ச்சனா நியாயம் கேட்கிறார். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மட்டும் தன்னை தொட்டாச்சிணுங்கி என்று கலாய்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார். முன்னதாக நிகழ்ச்சியில் அவர் துவக்கத்தில் ஒரு நிகழ்வின்போது கதறி அழுததை விஷ்ணு சுட்டிக்காட்டி தொட்டாச்சிணுங்கி என்று கமெண்ட் செய்துள்ளார்.
கடுப்பான அர்ச்சனா: ஒவ்வொரு முறையும் தான் அழுததையே சுட்டிக் காட்டுவதாகவும் அதையே குத்திக் காட்டுவதாகவும் அர்ச்சனா, விஷ்ணுவிடம் சண்டைக்கு போனார். மற்றவர் செய்யும் நகைச்சுவைக்கு தானும் சிரித்தால்தான் அது ஃபன் என்றும் அதில் தான் கஷ்டப்பட்டால் அது ஃபன் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் அர்ச்சனாவின் கேரியரில் மிகவும் முக்கியமான நிகழ்வாக அவர் அழுததை குறிப்பிட்டு விஷ்ணு பேசினார்.
விஷ்ணு -பூர்ணிமா லவ்?: இதனால் மிகுந்த கோபமடைந்த அர்ச்சனா, விஷ்ணுவும் பூர்ணிமாவும் பேசிக்கொண்டே இருப்பதாகவும் அவர்கள் இருவரும் லவ்வர்ஸ் என்று பார்ப்பவர்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இதனால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விஷ்ணு முழிப்பதாக தற்போதைய 2வது ப்ரமோவில் காணப்படுகிறது. சமீப நாட்களில் விஷ்ணு மற்றும் பூர்ணிமா இடையில் நெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











