Bigg boss 7 show: கேப்டன்ஷிப் குறித்து கேள்வி கேட்ட கமல்ஹாசன்.. திணறிய மாயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 62வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

இன்றைய தினம் வாரயிறுதி எபிசோடில் தோன்றிய நடிகர் கமல்ஹாசன் பல விஷயங்களை முன்னெடுத்து ஹவுஸ்மேட்களை கேள்விக்குட்படுத்தியதை அடுத்தடுத்த பிரமோக்களில் பார்க்க முடிந்தது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனை அதிரடியாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 62வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்றைய தினம் வாரயிறுதி எபிசோடின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இதில் நடிகர் கமல்ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஹவுஸ்மேட்சுடன் விவாதித்ததை பார்க்க முடிந்தது.
அடுத்தடுத்த எலிமினேஷன்: நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே அனன்யா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் தொடர்ந்து பிரதீப், விஜய் வர்மா, கானா பாலா என அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆனதையும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 7 பேர் இதுவரை நிகழ்ச்சியில் நுழைந்ததையும் கடந்த வாரங்களில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி காட்சிப் படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் வாரயிறுதி எபிசோட்களில் தோன்றும் நடிகர் கமல்ஹாசன் பல அதிரடி முடிவுகளை வெளியிட்டதையும் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்களை எலிமினேட் செய்ததையும் பார்க்க முடிந்தது.
எளிமையாக காணப்பட்ட கமல்ஹாசன்: இந்த வாரமும் வாரயிறுதி நாளான இன்று அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில் முதல் பிரமோவில் கமல் பேசினார். வழக்கமாக இல்லாமல் இன்றைய தினம் அவர் மிகவும் எளிமையாக காணப்பட்டார். மேலும் தன்னை பெஸ்ட் என்று காட்டிக் கொள்வதற்காக மற்றவர்களை மோசமானவர்களாக காட்டுவது ஹவுஸ்மேட்சின் கொள்கைகளாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். புகழ்ச்சி எல்லாம் தனக்கு வஞ்சமெல்லாம் பிறருக்கு என்று அவர்கள் நடந்துக் கொள்வதையும் சுட்டிக் காட்டினார்.
கமல் கேள்வி.. திணறிய மாயா: தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 2வது பிரமோவில் இந்த கேப்டன் சிறப்பாக செய்ததாக நம்புபவர்களை ஒருபுறமாக உட்காரும்படி அவர் கேட்பதாக அமைந்துள்ளது. தொடர்ந்து பேசும் மணி, விக்ரமின் கேப்டன்ஷிப்பை பாராட்டி பேசுகிறார். தொடர்ந்து அவர் அர்ச்சனா, மாயா உள்ளிட்டவர்களிடம் கேள்வி கேட்பதாகவும் தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது. அவரது அடுத்தடுத்த கேள்விகளால் மாயா திணறுவதையும் பார்க்க முடிகிறது.
அர்ச்சனா ஆர்மி: இதனிடையே அர்ச்சனாவிற்கு இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிகமான சப்போர்ட்டை கமெண்ட் மூலம் தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது. அவர்தான் டைட்டில் வின்னர் என்று கூறுவதையும் அடுத்தடுத்த கமெண்ட்கள் மூலம் காண முடிந்தது. அதற்கேற்ப கடந்த வாரத்தில் சண்டையாக இருந்தாலும் எதையும் சுட்டிக் காட்டுவதாக இருந்தாலும் மாயாவை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியை களைகட்டினார். ஆனால் அவர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதாகவும் கமெண்ட்கள் காணப்படுகின்றன.
Bigg boss 7 tamil 2nd promo today (2nd December 2023): பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 62வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது பிரமோவில் கேப்டன்ஷிப் குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளது. அவரது அடுத்தடுத்த கேள்விகளால் மாயா திணறுவதையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











