அருண் - அர்ச்சனா காதல் கிசுகிசு.. நானும் மனுஷிதான்.. மனசு வலிக்கிறது.. அர்ச்சனா வேதனை!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 18 கோட்டியாளர்களில் ஒருவரான அருண் பிரசாத்தும், கடந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா ரவிச்சந்திரனும் காதலித்து வருவதாக தொடர்ந்து இணையத்தில் செய்தி பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அர்ச்சனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வீஜேவாக இருந்த அர்ச்சனா ரவிச்சந்திரன், அதைத்தொடர்ந்து ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற அர்ச்சனா, உள்ளே சென்றது, பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அர்ச்சனா ரவிசந்திரன்: இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கார்டு போட்டியாளராக வந்த எவரும் டைட்டிலை பெறாத நிலையில் முதன்முதலாக அர்ச்சனா டைட்டிலை வென்றார்.மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருணும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக செய்தி உலாவி வந்திருந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் அருண் கலந்து கொண்டதால், அதற்கு காரணம் அர்ச்சனா தான் என்ற செய்தி பரவியது.
காதல் கிசுகிசு: மேலும், கடந்த மாதம் அர்ச்சனாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது அருண், கேமிரா முன் நின்று அவரக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தார். இதையடுத்து, காதலிக்கு வாழ்த்து சொல்லிய அருண் என்று இணையத்தில் செய்தி பரவிய நிலையில், அர்ச்சான தனது எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

உருக்கமான பதிவு: அதில், என் வாழ்க்கையில் நான் இந்த இடத்திற்கு வர ஒவ்வொரு அடியிலும் பெரும் சவால்கள், விமர்சனங்கள், எண்ணற்ற தியாகங்களை சந்தித்து இருக்கிறேன். அந்த கடின உழைப்பை யாரும் கவனிக்கவில்லை என்பதை நினைக்கும் போது, மிகுந்த வேதனை அடைகிறேன். அருண்பிரசாத்தும் நானும் வெவ்வெறு விருப்பங்களைக் கொண்ட இரண்டு தனித்தனி நபர்கள். எனக்கு இருக்கும் மற்ற நண்பர்களைப் போலவே நான் அவரை ஆதரிக்கிறேன், ஆனால், அவருடைய செயல்களுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. இந்த இடத்திற்கு நான் கடுமையாக போராடி இருக்கிறேன். ஆனால், அந்த போராட்டத்தை மக்கள் மறந்துவிடுவதை நினைத்து என் மனம் உடைந்து போய் உள்ளது.
நானும் மனுஷிதான்: நீங்கள் எனக்குக் காட்டிய அன்பு, ஆதரவை நான் எப்போதும் மதிக்கிறேன், ஆனால், நான் செய்யாத ஒரு செயலுக்காக நீங்கள் என்னை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிக் பாஸில் உள்ள ஒவ்வொருவரும் வீட்டிற்குள் தெளிவாக விளையாடி வருகிறார்கள். நான் இங்கே இருக்கிறேன், தயவு செய்து, நானும் மனிதன் தான் என்பதை மறந்துவிடாதீர்கள், இது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியாக உள்ளது என்று அர்ச்சான அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











