பிக் பாஸ் 7: கோஹ்லியின் கோழிச் சண்டைகள்
மும்பை: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ள நடிகர் அர்மான் கோஹ்லி சக போட்டியாளர்கள் பலருடனும் சண்டை போட்டுள்ளார்.
பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவின் 7வது சீசன் நடந்து வருகிறது. இதில் நடிகை கஜோலின் தங்கை தனிஷா தன்னை விட வயதில் மூத்த நடிகரான அர்மான் கோஹ்லியை காதலிப்பது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அர்மான் கோஹ்லி சக போட்டியாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையும், பாடகியுமான சோபியா ஹயாத்தை தாக்கியதற்காக நேற்று கைது செய்யப்பட்டார்.

சோபியா
பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டைகளில் அர்மான்-சோபியா இடையேயான சண்டை மிகவும் பெரியது. அர்மான் சோபியாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் துடைப்பத்ததால் தாக்கினார்.

குஷால்
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள குஷாலுக்கும் அர்மானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து குஷால் அர்மானை பிளாப் நடிகர், கிழம் என்று அழைத்தார். பதிலுக்கு அர்மான் குஷாலின் கருப்பு நிறத்தை சுட்டிக் காட்டி அசிங்கப்படுத்தினார்.

ஆன்டி
பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான ஆன்டி அர்மானுக்கு சாப்பாடு கொடுத்தபோது அவர் அதை வாங்க மறுத்து சண்டை போட்டார். சண்டை முற்றி போக தொலைக்காட்சி நடிகையான காம்யா பஞ்சாபி ஆன்டியையும், தனிஷா அர்மானையும் இழுத்துச் சென்று சண்டையை நிறுத்தினர்.

காம்யா
அர்மானுக்கும் காம்யாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஆன்டியும், காம்யாவும் சேர்ந்து அர்மானுக்கு பிரச்சனை தரவே அவர் கடுப்பாகிவிட்டார். ஆத்திரத்தில் காம்யாவை திட்டி விவாகரத்தானவள் தானே நீ என்று அர்மான் கேட்டதால் அவர் அழுதுவிட்டார்.


Click it and Unblock the Notifications











