தர்ஷா குப்தாவை நோண்டி நொங்கெடுத்த விஜய் சேதுபதி.. பதிலுக்கு பதில் பேசிய அம்மணி.. ஆரம்பமே இப்படியா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் ஆட்டம் பட்டத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் நான்காவது போட்டியாளராக என்ட்ரியாகி உள்ள தர்ஷா குப்தா, நான் நல்லவளுக்கு நல்லவ.. கெட்டவளுக்கு கெட்டவ என்று மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

மக்கள் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக விஜய் டிவியில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. நம் மனதிற்கு பிடித்த பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கே தனிக்கூட்டம் இருக்கு. இந்த நிகழ்ச்சியில் சிரிப்பு,அழுகை, சண்டை, காதல், கிசுகிசு,வம்பு, துரோகம், நட்பு, பிரிவு, பாட்டு கூத்து என அனைத்தும் இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை அடுத்து, இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8 8

பிக் பாஸ் சீசன் 8: இதில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகர் என்ட்ரி கொடுத்த நிலையில், இரண்டாவதாக மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, மூன்றாவது போட்டியாளராக இன்ஸ்டா குயின் தர்ஷா குப்தா வந்து, ஒரு பாடலுக்கு கலக்கலாக ஆட்டம் போட்டு என்ட்ரி கொடுத்தார்.

வீட்டின் செல்லப்பேன்: அதன் பின், தர்ஷாவை அழைத்த விஜய் சேதுபதி, இன்ஸ்டாகிராமில் எவ்வளவு பாலோவர் என்று கேட்க அவர் இரண்டு மில்லியன் என்று சொன்னார். உடனே விஜய் சேதுபதி, ஏற்கனவே நீங்க செலபிரிட்டிதான் என்று கூறி தர்ஷாவை சிரிக்க வைத்தார். இதையடுத்து, ஏவியில் பேசிய தர்ஷா குப்தா. என் வீட்டின் செல்லப்பெண் நான் தான். எப்போது ஜாலியாக பேசிக்கிட்டே இருப்பேன்.நான் ஆரம்பத்தில் ஸ்கூல் டீச்சராக இருந்தேன்.

பலன் கிடைக்கவில்லை: அப்போது தான் சென்னை வந்தேன். சென்னை வந்ததும். எனக்கு ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் என் மொத்த உழைப்பை போட்டு நடித்தும் பலன் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், லாக்டவுன் வந்தது அப்போது தான் இன்ஸ்டாவில் தினமும் 6 மணிக்கு விதவிதமான போட்டோக்களை போட்டோன். அதன்பின் விஜய் டிவியில் எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்தது. அதன்பிறகு தான், நான் ஆசைப்பட்ட ஒரு ஆங்கிகாரம் எனக்கு கிடைத்தது என்றார்.

நோண்டி நொங்கெடுத்த: பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு நாள் இருக்கக்போகிறேன் என்று தெரியாது. ஆனால், இங்கே இருக்கும் வரைக்கும் அனைவரிடமும் சிரித்துக்கொண்டே இருப்பேன் என்றார். உடனே விஜய் சேதுபது, யார் உங்களை திட்டினாலும் சிரிப்பீங்களா என்று கேட்டார். உடனே தர்ஷா நான் கண்ணாடி மாதிரி, சிரிச்சா சிரிப்பேன் முறைச்சா முறைப்பேன் என்றார். அப்போதும் விடாத விஜய்சேதுபதி, அப்போ நல்லவளுக்கு நல்ல, கெட்டவளுக்கு கெட்டவளா என்று கேட்க,பதில் சொல்ல முடியாத தர்ஷா குப்தா, சார் உங்களின் தீவிர ரசிகை ஐ லவ் யூ சார் என்று பதில் சொல்லி விஜய்சேதுபதியின் வாயை அடைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X