பிக் பாஸ் 8.. சிறப்புக் காட்சிக்காக கிம்முக்கு ரூ. 85 லட்சம் கொடுத்து அழைப்பு?
மும்பை: உலக அளவில் தனது பின்னழகால் அவ்வப்போது இளைஞர்களின் மனதில் அலையடிக்க வைத்து வரும் கிம் கர்தஷியான் இந்தியாவுக்கு வரும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
சமீபத்தில்தான் அவர் பேப்பர் என்ற பத்திரிகைக்காக தனது பின்னழகை வெளிச்சம் போட்டுக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் அவரை பிக் பாஸ் 8 ரியாலிட்டி ஷோவில் சிறப்பு தரிசனம் செய்ய வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

இதற்காக கிம்முக்கு ரூ. 85 லட்சம் கட்டணமாக கொடுக்கவுள்ளனராம். தங்களது நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர வைப்பதற்காக கிம்மை அழைக்கத் திட்டமிட்டுள்ளனராம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் இந்த ஒப்பந்தம் முடிவானதாக கூறுகிறார்கள். ஒப்பந்தத்தில் கிம்மும் கூட கையெழுத்துப் போட்டு விட்டாராம்.
சமீப நாட்களாக பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் குறைந்து வருகிறது. இதையடுத்து சரிவை சமாளிக்க கிம்மின் உதவியை நாடியுள்ளனராம்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் சவாலாக ஆமிர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி வந்துள்ளது.
தனது பாடிகார்டு, மேக்கப் மேன், உதவியாளர், தனது சகோதரிகளில் ஒருவர் ஆகியோருடன் கிம் வருவார் என்று தெரிகிறது.
நவம்பர் 22ம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. கலர்ஸ் டிவி இதை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் வருவதாக இருந்தால் இதுதான் அவருக்கு முதல் இந்தியப் பயணமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











