Bigg Boss 8: என் உடம்பு தான் பிராண்டு.. ஆப்பை நானே தேடி வச்சிக்கிட்டேன்.. களமிறங்கிய ரவீந்தர்!

சென்னை: விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கோலாகல துவக்க விழாவுடன் தொடங்கி உள்ளது. கடந்த 7 சீசன்களையும் வெற்றிகரமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் அல்டிமேட் போலவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

இதில் முதல் ஆளாக தயாரிப்பாளரும், சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகர் வந்திருந்தார். அவரை வரவேற்ற விஜய் சேதுபதி, வழக்கமான யாராவது உடம்பை பற்றி கிண்டல் அடித்தால் கோவம் ஆனால், நீங்களே FAT MANனு சொல்வதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கு என்றார். இதற்கு பதில் அளித்த ரவீந்தர். உடம்பு குறைய வேண்டும் என்று பல விஷயத்தை டிரைப் பண்ணேன் ஆனால், உடம்பு குறைந்தபடி தெரியவில்லை. இதனால் என் உடம்பை பிராண்டாக மாற்றிவிட்டேன் என்றார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8 8

தயாரிப்பாளர் ரவீந்தர்: மேலும், பிக் பாஸ் தான் எனக்கு வாழ்க்கையில் எல்லாம் கொடுத்தது.முதன் முதலில் வனிதாவை ட்ரோல் செய்து தான் ஆரம்பித்தேன். அதைத்தொடர்ந்து கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய விமர்சனம் மோசமானதாக இருக்காது நியாயமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் உள்ளே போடா போ.. உன்னை பார்த்துக்கொள்கிறோம் என்று என்னை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். எனக்கு நானே தேடி வெச்சிக்கிட்ட ஆப்பு தான் இது. இந்த நிகழ்ச்சி பற்றி நன்றாக தெரிந்ததால் பெரிய பிளான் எதுவும் இல்லை என்று ரவீந்திரன் கூறினார்.

நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். யாருக்கும் தெரியாமல் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருப்பதியில் பெற்றோரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களின் திருமணம் இணையத்தில் பெரும் பேசு பொருளான நிலையில், இருவரும் போட்டி போட்டுக்கு கொண்டு சேனல் சேனலாக சென்று பேட்டி கொடுத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X