பிக்பாஸ் 8 இரண்டாம் இடத்தை பிடித்தது யார்?- உணர்ச்சிவசப்பட்ட விஜய் சேதுபதி
106 நாட்கள் நடைபெற்ற இந்த பிக்பாஸ 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டைட்டில் வின்னர் முத்துகுமரன் என தகவல் வெளியாகியுள்ளது. இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் வந்தனர். இன்று மாலை முதல் பிக்பாஸ் போட்டியை காணும் ஒவ்வொருவருக்கும் வின்னர் யார்? என்பது தான் கேள்வியாக உள்ளது. போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த வேலையில், நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
எப்போதும் தனக்கான உரிய ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொல்லும் விஜய் சேதுபதி, விஷாலிடம் சூசகமாக இவர் தான் ரன்னர் என்பது போல் ஒரு கதை கூறியிருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் தான் நடித்த அனுபவத்தையும், அதில் இயக்குநர் தியாகராஜா தனக்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டதையும் தெரிவித்தார். அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது, "நம்ம வாழ்க்கையில் ஏற்றம் இரக்கம் இருக்கும் அதையெல்லாம் கடந்துதான் நமக்கான இலக்கை நோக்கி பயணிக்க முடியும். இந்த பிக்பாஸ் வீட்டில் நீங்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை சேமித்து கொள்ளுங்கள்.

இங்கு நான் பேசிய வார்த்தைகளோ, கடினமாக நடந்துகொண்ட விதத்தை எண்ணி வருந்த வேண்டாம். என் மீதும் தவறான உதாரணங்கள் இருந்தால் தவிர்த்திடுங்கள். 5 பேருக்கும் என் வாழ்த்துகள்" என தெரிவித்தார். அப்போது, "முத்துக்குமரனை பார்த்து உனது அசூர வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது" என்று கூறினார். நொடிக்கு நொடி அடுத்து என்ன நடக்கும் பரபரப்புக்கு நடுவில் ஒரு பிரேக் முடிந்து வருவதற்குள் 5 போட்டியாளர்களில் பிரயன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கண்ணீர் மல்க போட்டியாளர்கள் அவரை வழி அனுப்பி வைத்தனர். ரயன் வெளியேறும் தருணத்தில் எல்லோரும் உச்சி முகர பாராட்டினர்.
இப்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் 4 பேர் தான் உள்ளனர். முத்துக்குமரன் வின்னர் என்பது உறுதியான நிலையில், ரன்னர் யார் என்ற கேள்விதான் மேலும் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. ரம்மி ஆட்டத்தில் கிங் கையில் இருந்தாலும், ஜோக்கர் இல்லாத ஆட்டம் வெத்து சீன் தான். அது போலத்தான் ஒரு போட்டியை பொறுத்தவரை போட்டியாளர்கள் யாராக இருந்தாலும், வின்னரை கொண்டாடுவதை போல் 2ஆம் இடம் பிடித்தவர் யார் என்பது ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை மேலும் பதப்படுத்தும். அதுபோல பிக்பாஸ் போட்டிக்குள் பிரளையம் வெடித்தாலும் சரி எங்களுக்கு 2ஆம் இடம் பிடித்தவர் யார் என்பதை தெரிந்துகொள்வதில் பார்வையாளர்கள் தலையை பிய்த்துகொள்கின்றனர்.
ஒருவேலை சௌந்தர்யா தான் 2ஆம் இடம் பிடித்துள்ளார் என்ற ஆதரவும் பெருகி வருகிறது. ஆனால், பலரது உள் மனது விஷால் தான் 2ஆம் இடத்தை பிடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்று முனுமுனுக்கின்றனர். ஆனால், தற்போது வெளியான தகவலின் படி சௌந்தர்யா தான் பிக்பாஸ் 8ன் ரன்னர் என கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்கும் சௌந்தர்யா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











