Bigg Boss 8: சௌந்தர்யா கூட என்னை கம்பேர் பண்ணாதீங்க.. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.. ஜாக்குலின் ஓபன்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8, கடந்த 19ஆம் தேதி முடிந்தது. இந்த சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் வென்றார். அவருக்கு ரூபாய் 40. 5 லட்சங்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் போட்டியாளர்கள் பலரும் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த சீசனின் டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஜாக்குலின் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஜாக்குலின் தான் இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலேயே, 15 வாரமும் நாமினேட் செய்யப்பட்டு, மக்களின் ஆதரவால் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர். இவர் கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியைத் தழுவி, வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஜாக்குலின் வெளியேறிவிட்டாரே என, தீவிரமான பிக் பாஸ் ரசிகை ஒருவர், மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றார்.

இந்த சீசனில், ஜாக்குலின் வெளியேறுவதற்கு முன்னர் வரை, வெளியேறிய அனைத்து போட்டியாளர்ளும் தங்களுக்கு வழங்கப்பட்ட, டம்மி டிராஃபிக்களை உடைத்தனர். ஆனால் பிக் பாஸ் தரப்பில் இருந்து டிராஃபியை உடைக்க வேண்டாம் எனக் கூறி வழி அனுப்பப்பட்ட முதல் போட்டியாளர் ஜாக்குலின். பணப்பெட்டி டாஸ்க்கினை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் போனதால், அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். போட்டி இன்னும் சில தினங்களில் முடியவுள்ள நிலையில், ஜாக்குலின் வெளியேற்றப்பட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஜாக்குலின் : இந்நிலையில் ஜாக்குலின் தற்போது அளித்த பேட்டியில் பணப்பெட்டி டாஸ்க் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, நீங்களும் சௌந்தர்யாவைப் போல், ஓடிவிட்டு பாதியில் திரும்ப வந்திருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் இறுதி மேடையில் நீங்களும் இருந்திருக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் இல்லையா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதிருப்தி: இந்தக் கேள்விக்கு அவர்," நான் முதல் நாளில் இருந்து பல இடங்களில் திட்டு வாங்கியுள்ளேன். பல இடங்களில் என்னைத் திருத்திக் கொண்டுள்ளேன். இதுதான் நான். அப்படி இருக்கும்போது வெளியே ஓடிவிட்டு, நான் பாதியில் திரும்பி வந்தால் அது ஜாக்குலினே இல்லை. நமக்காக மக்கள் பார்த்துக் கொண்டுள்ளார்கள். நான் ஒருவேளை பாதியில் ஓடிவிட்டு வீட்டிற்குள் வந்திருந்தால், மக்களுக்கு அது அதிருப்தியைக் கொடுத்திருக்கும். நான் பாதியில் ஓடிவிட்டு வரக்கூடிய நபர் கிடையாது.

சௌந்தர்யா : எல்லோரும் சௌந்தர்யா குறித்து சொல்கின்றார்கள். சௌந்தர்யாவுக்கு பயம். அதனால்தான் திரும்பி வந்துவிட்டார். இறுதி மேடையில் சௌந்தர்யாவைப் பார்க்கும்போது அழகாக இருந்தது. எனக்கும் ஃபைனலுக்கு போகவேண்டும்தான். ஆனால், எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கில் வென்று போகவேண்டும், அதுதான் நான். வெளியே வந்த பின்னர் மக்கள் கொடுத்த அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். ஜாக்குலினின் இந்தப் பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











