நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற மலேசியாவுக்கு போன பிக் பாஸ் முத்துக்குமரன்.. வீடியோவே தரமா இருக்கே!
மலேசியா: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் முத்துக் குமரன். இவரது விளையாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்து போனதால் பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கினார். இவர் டைட்டிலை வெல்ல வேண்டும் என சக போட்டியாளர்களே கூறும் அளவிற்கு சிறப்பாக விளையாடினார். மேலும் ரசிகர்களை பல இடங்களில் உணர்வுப் பூர்வமாக சென்றடையவும் செய்தார். இவரது பேச்சுத் திறமையும் இவரது வெற்றிக்கு காரணம். இப்படியான நிலையில் தனது நண்பர்களுடன் மலேசியாவுக்கு சென்றுள்ள அவர் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் பலதரப்பட்ட பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகம் பெற்றவர். அதன் பின்னர் ஊடகங்களில் பணியாற்றியும் மக்கள் மத்தியில் தனக்கென தனி அறிமுகத்தை பெற்றார். இவர் உணவுகளை விரும்பிச் சாப்பிட்டு பகிரும் வீடியோக்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த பிக் பாஸ் சீசனான, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல் போட்டியாளராக கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடினார். மேலும் ஆட்டத்தை பிக் பாஸ் தரப்பில் இருந்து, திட்டம் போட்டு ஒரு நேர்கோட்டில் கொண்டு செல்ல முயற்சி செய்தால், முத்துக்குமரன் ஆட்டத்தை மொத்தமாக வேறு ஒரு தரத்திற்கு கொண்டு செல்வார். இது ரசிகர்களுக்கு மிகவுமே பிடித்துவிட்டது.
முத்துக்குமரன்: மேலும் வார இறுதி நாட்களில் அவரது பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் கூடிக்கொண்டே போனது. வீட்டுக்குள் அவருக்கு போட்டியாளர்கள் இருந்தாலும், பலரும் முத்துக்குமரனுக்கு மிகவும் நெருங்கியவர்களாக மாறிப்போனார்கள். முத்துக்குமரன் டைட்டிலை வெல்ல வேண்டும் என பல போட்டியாளர்கள் முத்துக்குமரன் டைட்டிலை வெல்ல வாழ்த்து கூறினார்கள். அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல், சக போட்டியாளர்கள் நினைத்ததைப் போல் முத்துக்குமரன் டைட்டிலை வென்றார்.

சுற்றுலா: டைட்டிலை வென்ற முத்துக்குமரனுக்கு ரூபாய் 41 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு தங்களது குடும்பத்திற்கு என புதிதாக வீடு கட்டி, அதில் அண்மையில்தான் குடியேறினார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படியான நிலையில் இந்த கோடை காலத்தை கொண்டாட, தனது நண்பர்களுடன் சேர்ந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மலேசியா சென்ற முத்துக்குமரன் அங்கு சென்று தனது உணவு சாப்பிடும் வீடியோவைக் கைவிடவில்லை.

நீண்ட நாள் ஆசை: மலேசியாவின் பிரதான உணவுகளில் ஒன்றான நாசிலிமா என்ற உணவு குறித்து தனது தந்தை கூறியதாகவும், அதைச் சுவைத்து பார்க்கப் போவதாகவும் கூறி, சாப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், இந்த உணவு நம்மூரில் தயாரிக்கப்படும் தேங்காய் சாப்பாடு தான் எனவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நீண்ட நாட்களாக சாப்ஸ் ஸ்டிக்ஸில் ( Chopsticks) நூடுல்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உள்ளது எனக் கூறி சாப்ஸ் ஸ்டிக்ஸில் நூடுல்ஸை எடுத்துச் சாப்பிட்டார். இது தொடர்பாக அந்த வீடியோவில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் மலேசியா போயும் சாப்பாட்டுக்கு வீடியோ போடறத விடாம செய்கிறாரே என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











