பிக்பாஸில் 'லவ் கேம்' ஆடிய பார்வதி? - "என் முதல் எதிரியே அவர்தான்!" - வெளியேறிய கலையரசன் ஷாக்கிங் பேட்டி
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் கலையரசன், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி தரும் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
வித்தியாசமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், 20 போட்டியாளர்களில் 5 பேர் வெளியேறிய நிலையில், திவ்யா, சாண்ட்ரா, பிரஜின், அமித் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்றுள்ளனர். நிகழ்ச்சியின் சூழலை மாற்ற பிக்பாஸ் குழு போராடினாலும், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்றே தெரிகிறது.

தற்போது, வீட்டின் தலைவர் திவ்யாவுக்கும் போட்டியாளர் பார்வதிக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துவருகின்றன. பார்வதி, யாருடைய பேச்சையும் கேட்காமல், சர்ச்சைகளை உருவாக்குவதையே தனது முக்கிய உத்தியாகக் கொண்டு விளையாடுவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிந்ததும், சில நாட்கள் கம்ருதீனுடன் காதல் என்ற பெயரில் நெருக்கம் காட்டி, அவரைப் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இப்போது வீட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் பார்வதிக்கு எதிராக அணிதிரண்டுள்ள நிலையில், திவாகர் மட்டுமே அவருக்கு ஆதரவாக நிற்பதாகத் தெரிகிறது.
வீட்டுத் தலைவராக இருக்கும் திவ்யா, தனது கடமைகளைத் திறமையாகச் செய்து வருகிறார். அவரது தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள், திவ்யாதான் டைட்டில் வின்னர் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையே, வெளியேறிய போட்டியாளர் கலையரசன் ஒரு பேட்டியில் பார்வதி குறித்து பகீர் தகவல்களை உடைத்துள்ளார். அவர் கூறியதாவது: "என்னை அதிகம் டென்ஷன் அடைய வைத்தது சபரி தான். எல்லா நேரமும் என்னைத்தான் டார்கெட் செய்தார். ஆரம்பத்தில் பார்வதியுடன் நானும் நெருக்கமாக இருந்தோம்.
பார்வதி கம்ருதீனை தன் தேவைக்காக பயன்படுத்துவதாக என்னிடமே ஒப்புக்கொண்டார். நாங்கள் அனைவரும் அவரைத் தவிர்க்க ஆரம்பித்ததும், கம்ருதீனுடன் நெருக்கம் காட்டினார். வீட்டில் அடிக்க வருவது போல் நடிப்பது அவரது ஸ்பெஷல் டெக்னிக். பார்வதி ஆடியது தூய்மையான லவ் ஸ்ட்ராட்டஜி தான்.
தலைவர் இல்லையென்றால் தளபதி போதும் என்கிற மாதிரி, இந்த சீசனில் கம்ருதீன் ஹேண்ட்சமாக இருப்பதால் அவரைப் பயன்படுத்திக்கொள்வோம் என்று சொன்னார். திவாகர் நேரடியாகவே பார்வதியிடம் இது தப்பு என்று எச்சரித்துவிட்டார்" என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.
கலையரசனின் இந்தக் கருத்துக்கள், பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியிருக்கும் உறவுகளின் பின்னணியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.


Click it and Unblock the Notifications











