உலகிலேயே கவர்ச்சியான பெண்.. அவளின் அதீத அன்புக்கு நான் அடிமை.. அபிஷேக் ராஜா பேட்டி!

சென்னை: ஒரு தாய் ஒரு குழந்தையை ஒரு வித ரசிப்புத்தன்மையோடு கொஞ்சுவாள், அது போலத்தான் சுவாதி என்னை ரசித்துப்பார்த்து கொஞ்சுவாள் அதுதான் அவளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அந்த அதீத அன்புக்குத்தான் நான் அடிமை என்று அபிஷேக் ராஜ் தனது மனைவி சுவாதி குறித்து பேசி உள்ளார்.

யூடுயூப் விமர்சகரான அபிஷேக் ராஜா நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் 5ல் கலந்து கொண்ட இவரை, நெட்டிசன்கள் வச்சி செய்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல், அந்த வீட்டில் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு பிடிக்காததால், 21 நாட்களிலேயே வெளியேறினார். மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த போதும் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

Bigg Boss abhishek raja swathi

அபிஷேக் ராஜாவிற்கு ஏற்கனவே தீபா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக சில வருடங்களில் இருவருக்கும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். தற்போது அபிஷேக் ராஜா தன்னுடைய தோழி சுவாதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் எளிமையான முறையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அபிஷேக் ராஜா பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அபிஷேக் ராஜா மற்றும் சுவாதி கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். அதில் பேசிய அபிஷேக் மணிரத்னம், ஜிவிஎம் படத்தில் வரும் காதலிப்போல ஒருத்தி வரமாட்டாளா என்று பல நாட்கள் காத்துக்கொண்டே இருந்து இருந்தேன். நான் இரண்டாம் திருமணம் செய்து கொள்வேன் என்று நினைக்கவே இல்ல. இவர் பேசுவது, இவளின் அன்பு எல்லாம் அப்படியே உண்மையாக இருக்கும். அவள் அளவுக்கு எல்லாம் என்னால் வரவே முடியாது.

8 வருட வித்தியாசம்: இவளிடம் நான் பல முறை சொல்லி இருக்கிறேன். நானே ஒரு ஏமாற்றுப்பேர்வழி.. நீ என்னை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறாய் என்று சொல்லி இருக்கிறேன். சுவாதியை பொருத்தவரை, அவர் என் நண்பராக இருந்து, கேர்ள் ஃப்ரண்டாக மாறி, மனைவியாக மாறியவர். அவளுக்கும் எனக்கும் 8 வருஷ வித்தியாசம், வேற வேற சாதி அதை பற்றி எல்லாம் பேசுறாங்க. எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. அவளுக்கு என்னைப்பற்றி எல்லாவிஷயங்களும் தெரியும்.

அழகான பெண்: அவளது கலரை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்த உலகத்திலேயே அதிக கவர்ச்சியான பெண் என்றால், அது அவள்தான். ஒரு தாய் ஒரு குழந்தையை ஒரு வித ரசிப்புத்தன்மையோடு கொஞ்சுவாள், அதுதான் அவளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தாலி கட்டும் அந்த நேரத்தில் கூட ஏய்.. உண்மையாத்தான் லவ் பண்ற போல,கல்யாணம் பண்ணிட்டியேன்னு கேட்டா? நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன் அவளுக்கு எப்பவும், நான் லவ் பண்ணிக்கிட்டே இருக்கணும், அதை இவள் செக் பண்ணிக்கிட்டே இருப்பாள், அது தான் எனக்கு இவளை பிடிக்க காரணம், இதனால் தான் அவள் போல எனக்கு ஒரு பயங்கரமான அடிக்‌ஷன் என்று அந்த பேட்டியில் அபிஷேக் ராஜா கூறியுள்ளார்.

8 வயது வித்தியாசம்: அப்போது பேசிய சுவாதி, என்னுடைய அப்பா அம்மாவிற்கு மகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவருக்கும் எனக்கும் 8 வயது வித்தியாசம். வேறு வேறு சாதியாக இருந்தாலும், நான் இவரை கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய பெற்றோர் தான்.அவர்கள் என்ன நடந்தாலும், எவ்வளவு சண்டை வந்தாலும், விவாகரத்து என்ற முடிவுக்கு செல்லவில்லை. அது எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது என்று பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X