Don't Miss!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- News
வேகமாக 'யூ டர்ன்'.. 500 அடி பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்த பஸ்.. 40 பேர் பலி - பாகிஸ்தானில் சோகம்!
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நீ தான் கடவுள்.. கமலை புகழ்ந்து வாங்கி கட்டிக்கொண்ட பிக்பாஸ் பிரபலம் !
சென்னை : சென்னை கமல்ஹாசனை புகழ்ந்து ட்வீட் போட்ட பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜாவை இணையவாசிகள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக அரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தனமாக
மிரட்டிய
விஜய்சேதுபதி..
அடுத்து
ஹீரோவாக
அசத்தப்போகும்
மாமனிதன்
எப்போ
ரிலீஸ்
தெரியுமா?

விக்ரம் ஹிட்
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என எல்லா இடங்களிலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷின் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

வசூல் வேட்டை
இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுவதால், விக்ரம் திரைப்படம் உலகளவில் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, உலகம் முழுவதும் படம் 13 நாட்களில் ரூ. 317 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை என்பதால், வரும் நாட்கள் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடன்களை முடித்துவிட்டேன்
விக்ரம் படம் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, விக்ரம் படம் மகத்தான வெற்றி பெற்று லாபத்தை குவித்து வருகிறது. இதனால், நான் எனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்திவிட்டேன். எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னால் முடிந்ததைக் கொடுப்பேன். அதன் பிறகு என்னிடம் எதுவும் இல்லை என்றால். நான் இனி கொடுக்க எதுவும் இல்லை என்று சொல்விடுவேன், வேறு யாரிடமிருந்தோ பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உதவுவது போல் நடிக்கமாட்டேன். எனக்கு பெரிய பட்டங்கள் எதுவும் வேண்டாம். நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார்.

“நீ தான் கடவுள்“
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிஷேக் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியதை பதிவிட்டு, "நீ தான் கடவுள்" என கூறியிருந்தார். இந்த பதிவால் கடுப்பான இணையவாசிகள். அது என்ன நீ உனக்கு மரியாதையே தெரியாதா என்றும், எப்பா என்ன உருட்டு உருட்டுற என்று கேட்டு கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.