Bigg Boss: பணப்பெட்டியுடன் வந்த விஷால்.. கழுத்தில் முத்தம் கொடுத்த அன்ஷிதா.. கடுப்பான அர்னவ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் யார் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது படப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில், பணப்பெட்டியுடன் உள்ளே வந்த விஷாலுக்கு அன்ஷிதா முத்தம் கொடுத்தை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக சென்றது, இதில், இரண்டு லட்சம் ரூபாய் பணப்பெட்டி எடுக்கும் டாஸ் நடைபெற்றது. அதில், பவித்ரா மற்றும் ஜாக்குலின் கலந்து கொள்வதாக கூறினர். அப்போது, பவித்ரா, ஜாக்குலினிடம் நான் போவதாக கூறியதை அடுத்து அவர் விட்டு கொடுத்தார். இதையடுத்து, பவித்ரா 25 நிமிடத்திற்குள் பணப்பெட்டியுடன் உள்ளே வந்துவிட்டார். அடுத்து, பணப்பெட்டியை எடுக்க சென்ற சௌந்தர்யா எடுக்காமலே திரும்பி வந்துவிட்டார்.

ஜாக்குலின் வெளியேறினார்: அதே போல, பண பெட்டியை எடுக்க ஓடிய, ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு 35 வினாடிகளுக்கு பதில் 37 வினாடிகளில் வந்தார். 2 வினாடிகள் தாமதமானதால் அவர் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே மக்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் தொடர்ந்து எவிக்ட் செய்யப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டு வந்த ஜாக்குலின் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வீட்டில் உங்கள் பயணம் முடிகிறது என்று பிக் பாஸ் அறிவித்ததும் ஜாக்குலின் அழுதார். ஆனால் அங்கிருந்த பலர் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார்கள். அதன் பிறகு சிலுருக்கு கண்கள் கலங்கியது.
பணப்பெட்டியுடன் வந்த விஷால்: இதையடுத்து, ஐந்து லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுப்பதற்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டி போட முத்துக்குமரன், ராயன், விஷால் வந்தார்கள். இதில், முத்துக்குமரனும், ராயனும் ஏற்கனவே விளையாடி பணப்பெட்டியை எடுத்துவிட்டதால், இருவரும் விஷாலுக்கு விட்டு கொடுத்தனர். இதில், 25 வினாடிக்குள் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விஷால் உற்சாகத்துடன் உள்ளே நுழைந்து கெத்துக்காட்டி விட்டார். இப்போது பேசிய விஷால், என்னால் ஜெயிக்க முடியுமா என்று யோசித்து தயங்கி கொண்டு இருந்தேன், ஆனாலும் ஜெயிக்க முடியும் என்று ஊக்கம் அளித்து ஓட வைத்தீர்கள் பிக் பாஸ் என்று கண் கலங்கி பேசினார்.
கழுத்தில் முத்தம்: அனைவரும் விஷாலை தனித்தனியாக பாராட்டிக்கொண்டு இருக்க, அப்போது வந்த அன்ஷிதா, விஷாலை கட்டிப்பிடித்து கழுத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார். அந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இதைப்பார்த்த இணையவாசிகள், எம்மா அன்ஷிதா,விஷாலை பாராட்டுவது எல்லாம் சரி, அதற்காக இப்படியா முத்தம் கொடுப்பீங்க என்றும், கொஞ்சமாவது அர்னவை நினைச்சு பாத்தீங்களா... பாவம்ய்யா அவரு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











