பிக்பாஸ் டூ பிரேக் அப்.. அன்ஷிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த அடுத்த வாய்ப்பு.. மேடம் செம ஹேப்பி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராகவும், சௌந்தர்யா முதல் ரன்னர் அப்பாகவும் வந்தார்கள். இந்த சீசனில் கவனம் ஈர்த்த போட்டியாளர்களில் அன்ஷிதாவும் ஒருவர். அவர் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக அர்னவ்வுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்த சீசனில் அர்னவ்வும் அன்ஷிதாவுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அன்ஷிதாவுக்கு விஜய் டிவி அடுத்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சீசனில் முத்துக்குமரன் முதல் பரிசை வென்றார். சௌந்தர்யா இரண்டாவது இடத்தை பிடித்தார். முதல் இடம் வந்த முத்துக்குமரனுக்கு மொத்த தொகை 51 லட்சம் ரூபாய்வரை சென்றது. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இனிமேல் முத்துவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று பலரும் கணித்திருக்கிறார்கள்.

அன்ஷிதா: இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அன்ஷிதாவும் ஒருவர். அவர் விஜய் டிவியில் வந்த செல்லமா சீரியலில் நடித்து கவனம் ஈர்த்தவர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் செல்லம்மா தவிர்த்து வேறு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு நடிகர் அர்னவ்வுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். அதுகுறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. அதேசமயம் இந்த சீசனில் அர்னவ்வும் போட்டியாளராக பங்கேற்றார். வீட்டுக்குள் இரண்டு பேரும் யாரோ மாதிரிதான் காட்டிக்கொண்டார்கள். ஆனால் அர்னவ் எவிக்ட் ஆகி வெளியேறியபோது அன்ஷிதா அழுதுவிட்டார்.
விஷாலுடன் காதல்: அர்னவ் வெளியேறிய பிறகு போட்டியில் தொடர்ந்த அன்ஷிதா விஜே விஷாலுடன் நெருங்கி பழகினார். இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்துவிட்டதாக வீட்டுக்குள் பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் அதனை திட்டவட்டமாக மறுத்தார் அன்ஷிதா. சூழல் இப்படி இருக்க சில வாரங்களில் அன்ஷிதாவும் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் அவர் பேசிய விஷயம் பயங்கர ட்ரெண்டானது.
என்ன ஆனது?: அவர் பேசுகையில், "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். முன்பெல்லாம் அவரை பார்த்து பேசவே பயப்படுவேன். ஆனால் இந்த வீட்டுக்குள் வந்து சென்ற பிறகு நேராக அவரிடம் சென்று இனி நீ எனது வாழ்க்கையில் வேண்டாம் என்று தைரியமாக சொல்லிவிட்டேன். இந்த தைரியத்தை பிக்பாஸ் வீடுதான் எனக்கு கற்றுக்கொடுத்தது" என்று கூறினார். இதனையடுத்து அவர் பிரேக்கப் செய்தது யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் அலச தொடங்கினார்கள்.
அடுத்த வாய்ப்பு: இந்நிலையில் அன்ஷிதாவுக்கு விஜய் டிவி இன்னொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக அன்ஷிதா களமிறங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர், மீனா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் களமிறங்கும் அன்ஷிதா தனது நடன திறமையை காண்பித்து டைட்டில் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











