பிக் பாஸ் அன்ஷிதா குடும்பத்துடன் ஐக்கியமான விஷால்.. கல்யாணம் கன்பார்மா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார் நடிகை அன்ஷித்தா. பிக்பாஸ் வீட்டிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்த போது, சக போட்டியாளரான விஜே விஷாலை காதலிப்பதாக செய்திகள் பரவிய நிலையில், தற்போது அன்ஷிதாவின் குடும்பத்தோடு விஷால் இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8ல், சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், முத்துக்குமரன் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், மூன்றாவது இடத்தை விஷால் பெற்றனர்.

anshitha vj vishal love
Photo Credit:

அன்ஷிதா,விஷால்: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் நிச்சயமாக இருக்கும், முதலில் விஜே விஷால், தன்ஷிகா காதலிப்பதாக சொல்லப்பட்டது. இது உண்மை என்பது போல இருவரும் அடிக்கடி தனியாக அமர்ந்து பேசினார்கள். தன்ஷிகா வெளியே வந்ததும், விஷால், அன்ஷிதாவுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் தனியாக பல விஷயத்தை பேசினார். அதுமட்டுமில்லாமல், விஷாலும், அருணிடம் அன்ஷிதாவை பிடித்து இருப்பதாக கூறினார். அதே போல, அன்ஷிதாவும் அருணின் காதலில் விஷாலை காதலிப்பதாக சொன்னார். அதுமட்டுமில்லாமல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அன்ஷிதா, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன், வெளியில் என்னை ஒருவர் காயப்படுத்தினார். அவரிடம் நான் கெஞ்சி இருக்கிறேன். அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்தேன். ஆனால், பிக் பாஸ் வீடு என்னை மிகவும் யோசிக்க வைத்தது. வெளியில் சென்றதும் முதலில் அந்த நபரை சந்தித்து, உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பிரேக் அப் செய்து விட்டேன் என்றார்.

அன்ஷிதா தான் காரணம்: அன்ஷிதா செல்லம்மா சீரியலில் அர்னவுடன் சேர்ந்து நடித்த போது, இருவரும் நெருங்கி பழகி வருவதாக அர்னாவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியிருந்தார். அதன்பின் அர்னவிற்கும் திவ்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது சண்டையாக மாறி கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் அன்ஷிதா தான் என சொல்லப்பட்ட நிலையில், அன்ஷிதா அர்னாவை பிரேக் அப் செய்துவிட்டு, விஜே விஷாலை காதலித்து வருவதாக செய்திகள் பரவின. அது உண்மை என்பது போல இருவரும் பல இடத்தில் ஜோடியாக சுற்றி வருகின்றனர்

டிரெண்டாகும் போட்டோ: பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த அன்ஷிதா ஆர்யுரெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அன்ஷிதா சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறார். இதன் கிரகபிரவேஷத்தில் பலரும் கலந்து கொண்டனர். தற்போது அன்ஷிதா, தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் விஷால், அன்ஷிதாவின் தோள் மீது கைபோட்டு இருக்கிறார். இதைப்பார்த்த இணையவாசிகள், விஷால், அன்ஷிதாவின் குடும்பத்துடன் ஐக்கியமாகி விட்டார் என்றும், அப்போ விரைவில் திருமணமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X