Priyanka: நீ அதுக்கு தகுதியானவள்தான்.. பிரியங்காவின் 2வது திருமணம் குறித்து பிக் பாஸ் அன்ஷிதா வீடியோ!

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி நேற்று அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி வசி என்கிற சீரியல் தயாரிப்பாளரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்களை பிரியங்கா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதற்கு முன்னரே, இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் வீடியோக்களும் பரவியது. இப்படியான நிலையில் இவரது திருமணத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் அன்ஷிதா பகிர்ந்துள்ள வீடியோக்கள் தற்போது கவனம் பெற்று வருகிறது.

Bigg Boss Anshitha Shares Vijay TV Priyanka Deshpande Second Wedding Special Videos And Photos

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர் கடந்த 2022ஆம் ஆண்டு வரை இணைந்து வாழ்ந்த நிலையில் அதன் பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் முதல் திருமணத்திற்கு விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் எல்லாம் சென்றிருந்தார். சுமார் 6 ஆண்டுகால இல்ல வாழ்க்கைக்கு பின்னர் அவர்கள் பிரிந்தனர்.

Bigg Boss Anshitha Shares Vijay TV Priyanka Deshpande Second Wedding Special Videos And Photos

பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. அதன் பின்னர்தான் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்தார். இப்படியான நிலையில், இவரது திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய வட்டங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 8 இல் கலந்து கொண்ட அன்ஷிதான் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Bigg Boss Anshitha Shares Vijay TV Priyanka Deshpande Second Wedding Special Videos And Photos

அம்மா: அவர் பகிர்ந்த வீடியோக்களில், தாலி கட்டிய பின்னர் மிகவும் எமோஷனலான பிரியங்காவுக்கு, அவரது கணவர் வசி முத்தம் கொடுத்த பின்னர் அவரது அம்மாவின் கரங்களை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார். இதனைப் பார்த்த இணையவாசிகள் என்னதான் இருந்தாலும், பிரியங்காவுக்கு எல்லாம் அவரது அம்மா தான். அப்படி இருக்கும் போது அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு, எமோஷனல் உணர்வில் இருந்து வெளியே வருகிறார் என கூறி வருகிறார்கள்.

Bigg Boss Anshitha Shares Vijay TV Priyanka Deshpande Second Wedding Special Videos And Photos

அக்னி: அதேபோல் அன்ஷிதா மேலும் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் பிரியங்கா தேஷ்பாண்டே அம்மி மிதித்து நிற்கிறார், அவருக்கு அவரின் கணவர் வசி மெட்டி அணிவிக்கிறார். மேலும், பிரியங்காவின் கணவர் பிரியங்காவின் தம்பி கரங்களை பிடித்துக் கொண்டும், பிரியங்கா தனது கணவர் வசியின் கரங்களை பிடித்துக் கொண்டும் அக்னியை சுற்றி வலம் வருகிறார்கள். இந்த வீடியோக்களையும் அன்ஷிதா பகிர்ந்துள்ளார். மேலும் அவர் பகிர்ந்த புகைப்படத்தில், நடனக் கலைஞர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் சுனிதாவும் உள்ளார்.

தகுதி: அதோடு, " என் அன்பிற்குரிய அக்கா, இந்த உலகத்தில் சிறந்ததாக உள்ள அனைத்திற்கும் நீ தகுதியானவள். உனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும் என நம்புகிறேன். அதற்கான பிராத்தனையும் செய்து கொள்கிறேன். இந்த திருமணத்தின் மூலம் உனக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமையவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இந்த திருமணத்தில் நீ எப்படி சந்தோஷம் பொங்கும் முகத்துடன் இருந்தாயோ, அதுபோலவே உன் வாழ்க்கை முழுவதும் இருக்க வாழ்த்துகிறேன். திருமண நாள் வாழ்த்துகள் அக்கா" என வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X