முறுக்கேறிய சிக்ஸ் பேக் உடம்பு… கோபம் கொப்பளிக்கும் முகம்... மிரட்டும் பிக் பாஸ் ஆரவ் !
சென்னை : தமிழ் சினிமாவில் இதுவரை நிறைய பேர் சிக்ஸ் பேக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவங்களைவிட வித்தியாசமாக ஹாலிவுட் லெவலுக்கு உடம்பில் வித்தியாசம் காட்டி உள்ளார் பிக் பாஸ் ஆரவ்.
முறுக்கேறிய உடம்பு, சிக்ஸ் பேக், நரம்பு புடைக்கும் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார் ஆரவ்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் பிக் பாஸ் ஆரவா இது, என்னம்மா இருக்காரு என ஜொள்ளுவிட்டு பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் வெற்றியாளர்
பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ஆரவ் மருத்துவ முத்தம் என்ற புது வகையான முத்தத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி பிரபலமானார். இதனால் இளசுகள் மனதிலும் பதிந்து விட்டார் ஆரவ். இவரால் மன வருத்தத்தில் இருந்த ஓவியா போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.ஏகப்பட்ட நெகட்டிவ் கருத்து இவர் மேல் இருந்த போதும் பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ராஜபீமா படத்தில் கதாநாயகன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

காதல் திருமணம்
ஜோஷ்வா படத்தில் கதாநாயகியாக நடித்த ராஹிக்கை ஆரவ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஆரவ் தாறுமாறாக உடற்பயிற்சி செய்து ஆளே மொத்தமாக மாறி உள்ளார். இது ஆரவா என்று அனைவரும் வாய்பிளந்து ஆச்சரியப்படும் அளவுக்கு நரம்பு புடைக்க முறுக்கேற்றி மாஸ் போஸ் கொடுத்துள்ளார்.

டிரென்டிங் போட்டோ
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகைகள் ஆரவை ரசித்து ரசித்துப்பார்த்து தங்களது இதயத்தை பரிசாக அளித்து இந்த போட்டோவை டிராண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











