அர்ச்சனா செய்த “அந்த” செயல் புடிக்கல.. வெளியே கூட்டிட்டு வந்துடனும்னு நெனச்சேன்! அப்பா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனாவும் அவருடைய அப்பாவும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ச்சனா குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக அவருடைய அப்பா பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது செய்த செயல் தன்னுடைய மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது என்றும் அதனால் அர்ச்சனாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கூட்டிட்டு வந்து விட வேண்டும் என்று கூட நான் நினைத்தேன் என்று அர்ச்சனாவின் அப்பா மனம் திருந்தி பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகளோடு இருந்தது. இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் இந்த சீசன் இருந்தது. அதிலும் இந்த சீசனில் கடைசியில் அர்ச்சனா வெற்றி பெற்றது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு சிலர் அதை பாராட்டியும் வந்தனர்.
அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து எப்படி வெற்றி பெறலாம் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனாலும் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ச்சனாவின் அப்பா பேசுகையில் என்னை பொருத்தவரை ஒரு பொண்ணு அவளுடைய சொந்த காலில் நிற்கும் வரை திருமணத்தை பற்றி நினைக்க கூடாது என்பது என்னுடைய அறிவுரை.
ஆனால் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று நான் சொன்னதை விடவும் அதிகமாக சாதித்து காட்டி விட்டாள். முதல் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா அழும்போது என்னால் தாங்க முடியவில்லை. உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியின் தலைவரிடம் சென்று என்னுடைய மகளை தயவு செய்து வெளியே அனுப்பி விடுங்கள் என்று சொல்ல நினைத்தேன். ஆனாலும் வீட்டில் எல்லோரும் இன்னும் ஒரு சில நாள் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார்கள்.
ஆனால் அர்ச்சனா அடுத்த சில நாளில் உள்ளே நடந்த பிரச்சனைகளுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார். அதோடு தைரியமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அதோடு அங்கு ஒரு இடத்தில் கூட அர்ச்சனா தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று கெத்தாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு அர்ச்சனா பல பேட்டிகளில் நான் அவளை மிகவும் ஸ்ட்ரெட் ஆக வளர்த்து விட்டதனால் அவளுக்கு பெரிய நினைவுகள் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அதற்கான பதிலை நான் அவளிடமே கேட்க விரும்புகிறேன் என்று சொல்ல, அதற்கு அர்ச்சனா சிறுவயதில் என்னுடைய நண்பர்கள் எங்காவது வெளியே செல்லும்போது என்னையும் கூப்பிடுவார்கள். ஆனால் அப்பா அதற்கு அனுமதிக்க மாட்டார். ஆனால் வெளியே சென்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் அவர்களை நன்றாக புரிந்து கொண்டு திரும்பி வரும்போது மிகவும் நெருக்கமாகி விடுவார்கள். எனக்கு அந்த நெருக்கமானது இல்லாமலே போனது.
அதனாலயே எனக்கு பெரிய அளவில் நண்பர்கள் வட்டம் உருவாகவில்லை. இதைத்தான் நான் எல்லா பேட்டிகளிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று சிரித்தபடியே சமாளிக்கிறார். அதோடு என்னுடைய அப்பா முகம் கொஞ்சம் மாறினாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆனாலும் சில நேரங்களில் எனக்கும் நம்ம அப்பா மட்டும் எப்போ பார்த்தாலும் அட்வைஸ் பண்ணிகிட்டே இருக்காரே என்று கடுப்பாகத்தான் செய்யும்.
ஆனாலும் பிறகு அந்த அட்வைஸுக்கான உண்மை காரணம் ஒவ்வொன்றாக எனக்கு புரிய ஆரம்பித்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் அப்பாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தான் யோசித்து கொண்டு இருந்தேன். அதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது ஒரு கெட்ட கனவு கண்டேன். அதனால் நான் ரொம்பவே பயந்து போய் பிக் பாஸிடம் எங்க அப்பா அம்மா நல்லா இருக்காங்களா? என்று கேட்டு இருந்தேன். பிறகு அப்பாவை பார்த்த பிறகு எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











