அருண் ரொம்ப லக்கி.. நீல நிற புடவையில் இணையத்தை கலக்கும் அர்ச்சனா!

சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி, இன்று ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன், தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீல நிற புடவையில் ராஜகுமாரி போல காட்சியளிக்கும் அவரது ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அர்ச்சனா ரவிச்சந்திரன்: சன் தொலைக்காட்சியில் வீஜேவாக அறிமுகமான அர்ச்சனா, பின்னர் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, ஆல்யா மானசாவுக்கு எதிராக அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆரம்பத்தில் மென்மையான தோற்றத்துடன் இருந்த அர்ச்சனா, அந்த தொடரில் கொடுத்த வில்லத்தனமான நடிப்பால் பலரும் விருப்படும் நடிகையாக மாறினார்.

Bigg Boss archana ravichandran
Photo Credit:

பிக் பாஸ்: அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கிய அவர், ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் பின்னர் தனது நேர்மையான பேச்சு மற்றும் தைரியமான அணுகுமுறையால் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதுவரை வைல்டு கார்டாக உள்ளே சென்ற யாரும் டைட்டிலை வெல்லாத நிலையில், அந்த சாதனையை முறியடித்து வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறினார்.

அருணுடன் காதல்: அதே நேரத்தில், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலித்து வருவதாக நீண்டநாளாக தகவல்கள் பரவி வந்தன. ஆரம்பத்தில் இது வதந்தி என சொல்லப்பட்டாலும், இருவரும் ஒன்றாக வெளிப்படையாக தோன்றிய பிறகு ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண், அர்ச்சனாவின் பிறந்தநாளில் கேமரா முன் நின்று வாழ்த்து தெரிவித்த சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களது நிச்சயதார்த்த போட்டோகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

Bigg Boss archana ravichandran
Photo Credit:

அழகான போட்டோ: இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அர்ச்சனா வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த புகைப்படங்களில், அடர் நீல நிற புடவையுடன் மாடர்ன் டிசைன் பிளவுஸ் அணிந்துள்ள அர்ச்சனா, பாரம்பரியத்தையும் கிளாமரையும் கலந்த தோற்றத்தில் இருக்கிறார். நீண்ட ஜடை அலங்காரம், நெக்லஸ், வளையல்கள் மற்றும் இடுப்பணியுடன் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை மயக்கி வருகிறது. ஆரஞ்சு நிற பின்னணியில் எடுத்த இந்த போட்டோஷூட், அவரது அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X