Bigg Boss Tamil 8: பிக் பாஸ் 8ல் வரிசைக் கட்டும் டைட்டில் வின்னரின் காதலர், அந்த சீரியல் நடிகை!

சென்னை: விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் புதிய சீசன் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை கொண்டாட்டத்துடன் அமர்க்களமாக அரங்கேற காத்திருக்கிறது. கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிம்பு, சூர்யா, பார்த்திபன், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், இறுதியாக விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8


புதுச்சேரியில் அதற்கான புரமோ ஷூட் ஒன்றும் நடத்தப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு அந்த புரமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் கலந்துக் கொள்ளப் போகும் பிரபலங்களின் ரகசிய விவரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக லீக் ஆகி வருகின்றன.

சன் டிவியை தொடர்ந்து விஜய் டிவி: சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் டிவி சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனது மகாராஜா படத்தை புரமோட் செய்ய வந்திருந்தார். சினிமாவில் செம பிஸியாக இருந்தாலும், விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டு அவர் அடுத்த பிக் பாஸ் ஹோஸ்ட்டாக மாறிவிட்டார் என்றே கூறுகின்றனர். கமல்ஹாசனை போல அல்லாமல் வித்தியாசமான முறையில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8


போட்டியாளர்கள் பட்டியல்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள், சீரியல் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் என பல தரப்பட்ட பிரபலங்கள் 100 நாட்கள் வீட்டில் தங்கியிருக்க முயற்சி செய்து கிராண்ட் ஃபினாலேவில் பிக் பாஸ் டைட்டிலை மக்களின் அதிகப்படியான வாக்குகளை அள்ளி வெற்றி பெறுவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சாராம்சம். இந்த முறை ஏகப்பட்ட சீரியல் நடிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர்: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் டைட்டிலை நடிகை அர்ச்சனா தட்டித் தூக்கினார். டிமான்ட்டி காலனி 2விலும் அவருடைய பர்ஃபார்மன்ஸை ரசிகர்கள் கண்டு ரசித்தனர். அவருடைய காதலரும் பாரதி கண்ணம்மா சீரியலின் ஹீரோவுமான அருண் பிரசாத் இந்த சீசனில் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் கசிந்துள்ளன.

சீரியல் நடிகை பானுமதி: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் சின்னத்திரை நடிகை பானுமதியும் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டிடிஎஃப் வாசன், டிடிஎஃப் வாசனின் காதல் ஜோயா, மாகாபா ஆனந்த் என ஏகப்பட்ட பெயர்களும் அடிபட்டு வரும் நிலையில், இவர்கள் இருவரும் உறுதியான போட்டியாளர்கள் என்றே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X