2 ஆண்டில் முடிந்த திருமண வாழ்க்கை..‘செகண்ட் லவ்' ஷோவில் கலங்கிய அசீம்.. பாவய்யா இந்த மனுஷன்!
சென்னை: சின்னத்திரை நடிகரான அசீம், பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், மாயா, பூவே உனக்காக எனப் பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். அதோடு மட்டுமில்லாமல் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அங்கே பெண்களிடம் நடந்து கொண்ட விதம், சண்டை போடுவது, பேசுவது என எதுவுமே ஆரம்பத்தில் ரசிகர்களுக்குப் பிடிக்காததால் இணையத்தில் பலர் அசீமைக் கண்டபடி திட்டினார்கள். ஆனால், அத்தனை விமர்சனங்களையும் தாண்டி, இறுதிப்போட்டியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் பட்டத்தை வென்றார்.
'செகண்ட் லவ்' வீட்டுக்குள் அசீம்: தற்போது அசீம், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'செகண்ட் லவ்' என்கின்ற ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டு இருக்கிறார். காதலிலும் திருமண வாழ்க்கையிலும் தோற்று, மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இரண்டாவது காதலைத் தேடி, தனக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிதான் இந்த செகண்ட் லவ். இதில் பெண் போட்டியாளர்கள் 6 பேரும், ஆண் போட்டியாளர்கள் 6 பேரும் ஒரு வீட்டில் ஒரு மாதம் தங்க வைக்கப்படுவார்கள். அதில் யாருடைய மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ, அவர்கள் விரும்பினால் மோதிரத்தை மாற்றிக்கொண்டு நிஜ வாழ்க்கையிலும் தங்களது காதல் வாழ்க்கையைத் தொடரலாம் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

விவாகரத்து ரகசியம்: இந்த ஷோவில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பலரும் தங்களது வாழ்க்கையில் திருமணம் மற்றும் காதலால் சந்தித்த பாதிப்புகளையும், மனவேதனைகளையும் கூறி கண்கலங்கிப் பேசினார்கள். அப்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய அசீம், நான் நடிகராகவும், பெயரும் புகழுடனும் இருந்ததுதான் என்னுடைய திருமண வாழ்க்கை முறிந்ததற்கு முக்கியக் காரணம். என்னுடைய தீவிரமான ரசிகையாகத்தான் என் மனைவி முதலில் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அதன்பின்க இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஆதாரமாக எங்களுக்கு ஒரு அழகான மகனும் இருக்கிறான்.
பாவய்யா: இரண்டு ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில், திடீரெனப் புயல் வீசியது போல என்னுடைய மனைவி அடிக்கடி என்னுடன் சண்டை போட ஆரம்பித்தார். நான் நடிகராக இருப்பதை அவர் விரும்பவில்லை. அவர் மனதில் என்ன நினைத்தார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஒருகட்டத்தில், இந்த ஊரே நமக்குத் தேவையில்லை, நாம் வெளிநாட்டிற்குச் சென்று செட்டில் ஆகிவிடலாம் என வற்புறுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. என்னுடைய குடும்பத்தின் தொழில் பிசினஸாக இருந்தாலும், நடிப்பு என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த விஷயத்தில் இருவருமே பேசி ஒரு நல்ல முடிவெடுத்தோம். அதன் பிறகு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்தைப் பெற்றுப் பிரிந்துவிட்டோம் என்று அசீம் உருக்கமாகப் பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் எப்போதும் முரட்டுத்தனமாக, எதற்கும் அசராதவராக வலம் வந்த அசீமின் இந்த எமோஷனல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பல நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள், அசீமினுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகம் நடந்து இருக்கா... பாவய்யா என கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
