ஹீரோவாக அறிமுகமாகும் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்… வாழ்த்திய ரசிகர்கள் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாலாஜி, எதிர்பார்க்காததை எதிர்பார் என குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலாஜி முருகதாஸ்
கட்டுமஸ்தான உடல்வாகு... பார்த்தவுடன் வாவ் வாட் ஏ ஹேன்சம் பாய் என சொல்லக்கூடியவர் பாலாஜி முருகதாஸ். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் 4
மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகன், பிக்பாஸ் சீசன் 4ன் காதல் மன்னன், பயில்வான், தைரியசாலி, என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தார். பிக் பாஸ் சீசன் 4 ல் தன்னை தானே செத்துக்கியவன் என்று பாடல் பாடாத குறைக்கு பறைசாற்றிக் கொண்டார்.

நெருக்கமாக
ஆரியுடன் சண்டையிட்டு மண்டையை முட்டிக்கொண்ட நேரத்திலும், ஷிவானியுடன் தனி ட்ராக்கை ஓட்டிக்கொண்டுஇருந்தார். இந்த வீட்டில் ஷிவானியுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட்டித்து, பாலாஜிக்கு எடுபுடி வேலை செய்யத்தான் இங்க வந்தியா என ஷிவானியை கண்டமேனிக்கு திட்டித்தீர்த்துவிட்டு வெளியேறினார்.

ஏராளமான ரசிகைகள்
என்னத்தான் பாலாஜி முருகதாஸ் மேல் பல்வேறு சர்ச்சைகளை எழுந்தாலும், தன்னுடைய ஹேன்சம் லுக்கால் ஏராளமான பெண் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். ஏராளமான பெண்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து 2வது இடத்தை பிடித்தார்.

கதாநாயகனாக
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து எதிர்பார்க்காததை எதிர்பார் என கூறியுள்ளார். இந்த படத்தை லிப்ரா புரோடக்ஷன் தயாரிக்க உள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலால் பாலாஜியின் ரசிகைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











