ஜீ தமிழில் "பிக் பாஸ்" பிரபலம்.. அட இது சூப்பர் மேட்டரா இருக்கே.. யாருனு பாருங்க!
சென்னை : ஜீ தொலைக்காட்சியில் பல தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. புதுப்புது அர்த்தங்கள், சூப்பர் ஜூனியர், அன்பே சிவம் தெய்வம் தந்த பூவே, செம்பருத்தி, போன்ற பல தொடர்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
புதிதாக வந்துள்ள சூப்பர் குயின் என்ற ஃபேஷன் ஷோ பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பங்கேற்கிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி அனைவராலும் பல பாராட்டுகளைப் பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சர்வைவர் நிகழ்ச்சிக்கும் இடையே டிஆர்பி மோதல்கள் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரபல டிவி நாயகிகள்
'சூப்பர் குயின்' , மிகவும் பரிட்சயமான பெண் நட்சத்திரங்களை மற்றும் பிரபலங்கள் 12 பேர் ஒரே இடத்தில் தோன்றும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16 முதல் துவங்கியது. நடிகைகள் ஆஷா கௌடா, வைஷ்ணவி, ஜனனி, ஸ்வாதி, தேஜஸ்வினி, ஐரா, லாவண்யா, ஆயிஷா, பார்வதி, கண்மணி மனோகர், மற்றும் ஸ்ரீது கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் மற்றும் அதீத திறமைசாலிகள் என பலர் போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று உள்ளனர்.

சூப்பர் குயின்
இந்நிகழ்ச்சியில், சூப்பர் குயினாக களமிறங்கும் ஒவ்வொரும், 'சூப்பர் குயின்' என்கிற பட்டத்தினை வெல்வதற்காக போட்டியிடவுள்ளனர். நிகழ்ச்சியின் இந்த சீஸன் முழுவதும், போட்டியாளர்கள் சவாலான பந்தையங்களில் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களின் உண்மையான முகத்தினை நேயர்களுக்கு காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரபல விஜேக்கள்
நடிகர் நகுல் மற்றும் நடிகை ராதா ஆகியோர் போட்டியாளர்களை பல்வேறு முறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வார்கள். ரசிகர்களுக்கு பிடித்தமான ஆர்ஜே ஆனந்தி மற்றும் ஆர்ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, ஒவ்வொரு ஞாயிறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.

பிக் பாஸ் பிரபலம்
பல வெற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஜீ தமிழ், தற்போது இந்த புது முயற்சியில் இறங்கியுள்ளது. இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் இளைஞர்களையும் இந்த நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்துள்ளது. கேம் ஷோக்களை அதிகமாக விரும்பி பார்க்கும் இந்த சூழ்நிலையில் ,இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பங்கேற்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











