twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3: விஜய் டிவி நிகழ்ச்சிகளை காலி செய்ய வேற யாரும் வேணாம்.. பிக் பாஸே போதும்!

    |

    சென்னை: விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வாழங்கும் பிக் பாஸ் 3 ஆரம்பமாகி உள்ளது. இது பிற விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு கிலியைக் கொடுத்துள்ளதாம்.

    சன் டிவியின் சீரியல்கள் எப்போதுமே தனித்துவமாக இருக்கும். சீரியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா நாங்களும் மக்கள் விரும்புவது போல சீரியல்கள் கொடுப்போம் என்று களம் இறங்கிய விஜய் டிவி வெற்றி சூத்திரத்தை கண்டு கொண்டது.

    ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதிலும் இப்படி வெற்றி ஃபார்முலாவை கண்டுகொண்டது விஜய் டிவி. ஆனால், இப்போது இவைகளை கைவிட்டும் வருகிறது விஜய் டிவி தன்னை அறியாமலே.

    கோபிநாத் நிகழ்ச்சி

    கோபிநாத் நிகழ்ச்சி

    பிக் பாஸ் முதல் சீசன் ஆரம்பிச்ச போது, விஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான நீயா நானா நேரம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கோபிநாத் உலகம் எங்கும் மிகப் பிரபலமானார். நேரம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு இந்த நிகழ்சசியின் மவுசு சுத்தமாக குறைந்து போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை. இனி மீண்டும் அந்த நிகழ்ச்சி அதே இடத்தை கூட இல்லை, டிவியில் தொடருமா என்பது கூட சந்தேகம்தான்.

    சீசன் பை சீசன்

    சீசன் பை சீசன்

    விஜய் டிவியின் மிகமிக சக்சஸ் சீரியல் சரவணன் மீனாட்சி தொடர்.முதல் சீசன் செந்தில்,ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடித்தார்கள். மிகப் பிரபலமான இந்த ரீல் ஜோடியை உண்மை தம்பதியாக மக்களே மாற்றி அவர்களை வாழ வைத்தும் உள்ளார்கள். இரண்டாவது சீசனில் ரக்ஷிதா, ரியோன்னு ஜோடி சேர்ந்து இது மூன்று சீசன் வரை போனது. இந்த சீசன்களை இதற்கு மேல் தொடர விடாமல் செய்ததும் பிக் பாஸ்தான். ஆனால், நிஜமா சரவணன் மீனாட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைச்சுதுங்க.

    எண்டு கார்டு

    எண்டு கார்டு

    பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரஜன் நடிச்சுக்கிட்டு இருந்த சின்னத் தம்பி சீரியலுக்கு நந்தினிக்கும் ,சின்னத் தம்பிக்கும் இரட்டை குழந்தையை குடுத்து எண்டு கார்டு போட்டுட்டாங்க. இப்படிப்பட்ட சூழலில் இரவு நேர சீரியல்கள் சில நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ராமர் வீடு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் நிறுத்தப் படும் சூழல்.

    காட்டில் மழை

    காட்டில் மழை

    பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் நூறு நாட்களும் விஜய் டிவி காட்டில் மழைதான்.ஆனால்,அதற்குப் பிறகு விஜய் டிவியை தூக்கி நிறுத்த ரொம்ப மெனக்கெட வேண்டும். இந்த பிக் பாஸ் நேரத்தில் தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்திக்க சன் டிவி மட்டுமே எதாவது அதிரடியை அறிவித்து வருகிறது. அந்த அதிரடிகளும் சன் டிவி கையை சுட்டுக்கொள்ளாத அதிரடி எனறால் பாருங்களேன்!

    English summary
    The Bigg Boss 3, which is being hosted by world hero Kamal Haasan on Vijay TV shows, has started.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X