Bigg Boss: பிக் பாஸ் கவுன்டவுன் ஸ்டார்ட்... நாளை முதல்.. கலக்குப் போகும் கமல்!
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் 3 வது சீசன் தொடங்க இருக்கிறது.
இதற்கான கவுன்டவுனை கடந்த திங்கள் முதலே ஸ்டார்ட் செய்து வைத்து விட்டார் நம்ம கமல் ஹாசன்.
இந்த சீசன் பிக் பாஸில் கமலின் கெட்டப் கூட மாறி இருக்கிறது. கமலின் தலைமுடி எப்போதும் கருகருன்னு இருக்கும்.

நம்மவர் கெட்டப்
நம்மவர் கமல்ஹாசன் முடி எப்போதும் கரு கருவென்று இருக்கும். இப்போது அங்கங்கன்னு ரொம்ப லைட்டா சால்ட் தூவி, நெற்றிக்கு மேல் உள்ள முடிக் கற்றையில் ஒரு கற்றையில் மட்டும் வெள்ளையடிச்சு விட்டு இருக்காங்க. பெப்பர் சால்ட் கிருதா. நிஜமாவே ரசிகர்கள் ரசிக்கும்படி இந்த கெட்டப் ரொம்ப நல்லா இருக்கு. மகள் சுருதி ஹாசன் கூட கமலின் இந்த கெட்டப்பை பாராட்டினாராம்.

இன்னும் 5 நாள்
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம். ஆனா,நாம் பார்க்கறது நிஜமான முகம் இல்லைன்னு கமல்தான் ப்ரோமோவில் முதல் விளம்பரத்தை ஆரம்பிச்சார். அடுத்தும் இதே டயலாக்தான்...கமலுடன் ஆட்கள் மாறி மாறி வந்தார்கள். இதற்குப் பின்னர்தான் கவுன்டவுன் ஆரம்பிச்சு வச்சார். முதலில் இன்னும் 5 நாட்கள் வெயிட்டிங்கனு சொன்னார். அடுத்தடுத்து 4 நாட்கள்,மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என்றானது இன்னும் ஒரு நாள் என்கிற அளவுக்கு இன்று வந்துள்ளது.

பிக்பாஸ் 3 ப்ரோமோ
கமல் கண்ணாடியைப் பார்த்துவிட்டு, ரெடி, கேமிரான்னு சொல்லிட்டு பிக் பாஸ்னு அருகிலே மேலே பார்க்கிறார். எஸ்னு சொல்லிட்டு காதை கூர்மையாக்கி மீம் கிரியேட்டர்ஸ்... மீம் கிரியேட்டர்ஸ்ன்னு அழைக்கிறார். பிறகு ஓகே சொல்லிட்டு இன்னும் ஓரு நாள் என்று சொல்கிறார். அவருக்கு தெரியும்...மீம் கிரியேட்டர்ஸ் என்னென்ன செய்வாங்கன்னு தெரியாதவரா கமல். கண்ணாடிச்ச சீனை திரும்ப திரும்பவும் போடுவாங்க. கேலியும் கிண்டலும் கூட செய்வாங்க.

அரசியல் சின்னத்திரை
சினிமா, அரசியல், சொந்த வாழக்கை, சின்னத்திரை பிக்பாஸ் என்று எதில் யார் எந்த விமர்சனம் செய்தாலும், நல்லதை மட்டுமே இதுவரை எடுத்துக்கொண்டு, மற்றது தன்னை பாதிக்காதவாறு நடந்துக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல்தான்.இந்த வகையில் கமல் ரசிகர்கள் தங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை நான் நினைத்தாலும் தடுக்க முடியாது. நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது.
அவர்தான் உலக நாயகன் நம்மவர் நம்மில் ஒருவர் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











