Subiksha Salary: கடைசி நேரத்தில் கை நழுவிப்போன வாய்ப்பு.. எலிமினேட்டான சுபிக்ஷாவின் சம்பளம்!

சென்னை: பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக இந்த சீசனில் தான் ஒரே நேரத்தில் மூன்று போட்டியாளர்கள் எவிக்டாகி வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஃபைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சுபிக்ஷா, பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றி வெளியேறி இருக்கிறார். அவர் வீட்டில் 92 நாட்கள் இருந்த நிலையில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகவே உள்ளது.

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ ஃபினாளே டாஸ்க், எட்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், ஒவ்வொரு போட்டியா நடைபெற்று, இதில், வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறுபவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதில், ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிறப்பாக விளையாடிய அரோரோக டிக்கெட் டூ ஃபினாளே டாஸ்கில் அதிக மதிப்பெண் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Bigg Boss Subiksha salary
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9 : கார் டாஸ்கின் போது பார்வதி, கம்ருதீன் மற்றும் சாண்ட்ராவிற்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளினார். இதனால், பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து விஜய் சேதுபதி அவர்களை வெளியே அனுப்பினார். ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதால், அவர்களுக்கு எந்தவிதமான சம்பளமும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சுபிக்ஷாவின் சம்பளம்: ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெறியேற்றப்பட்டதால், எலிமினேஷன் இருக்காது என அனைரும் நினைத்த நிலையில், குறைந்த வாக்குகளை பெற்ற சுபிக்ஷா வெளியேற்றப்பட்டார். இதை யாரும் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். மற்ற விஷயத்தில் சுபிக்ஷா மந்தமாக இருந்தாலும், டாஸ்க் என வந்துவிட்டால், அதிரடியாக விளையாடி ஜெயித்துவிடுவார். அனைவரும் சுபிக்ஷா ஃபைனல் வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேறியது பலரை கவலையில் ஆழ்த்தியது. சுபிக்ஷாவிற்கு ஒரு நாளைக்கு 8000 ரூபாய் சம்பளம் இருக்கலாம் என கூறப்படுகிறது. வீட்டில் 92 நாட்கள் வரை இருந்திருக்கிறார். இதற்கு ஏற்றவாறு அவருக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அரோரா, சபரி, கானா வினோத், விக்ரம், திவ்யா, சாண்ட்ரா என 6 போட்டியாளர்கள் உள்ளனர். இறுதிக்கட்ட விளையாட்டு சூடு பிடித்திருக்கும் நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்காக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X