ஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil

By Siva

Recommended Video

பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு?- வீடியோ

சென்னை:பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா வந்ததும் சென்றாயனை தவிர மற்ற யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.

பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் சென்றுள்ளார்கள். பவர் ஸ்டார் பேட்டி எல்லாம் பிரமாதமாக கொடுத்துவிட்டு கடைசியில் நிகழ்ச்சியில் இல்லை.

இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத ஓவியா விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இவ்வளவு பிரபலம் ஆக முடியுமா என்பதை ஓவியாவை பார்த்து தான் அனைவரும் தெரிந்து கொண்டனர். அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிக் பாஸ் தனது நிகழ்ச்சியை பார்ப்பவர்களுடன் மட்டும் அல்ல போட்டியாளர்களுடனும் கண்ணாமூச்சி ஆடுகிறார். ஓவியாவை விருந்தாளி என்று கூறாமல் போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

சென்றாயன்

சென்றாயன்

ஓவியா பெட்டியும், கையுமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததை பார்த்த போட்டியாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சென்றாயன் மட்டும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓவியாவை வரவேற்றார்.

நடிப்பு

நடிப்பு

தான் ஒரு விருந்தாளி என்பதை கூறாமல் போட்டியாளர் போன்று பில்ட்அப் கொடுத்தார் ஓவியா. ஓவியா போட்டியாளர் என்றால் ரசிகர்கள் அவருக்கு தான் ஆதரவு கொடுப்பார்கள் என்பது தெரிந்து தான் போட்டியாளர்களின் முகங்கள் வாடிவிட்டது. இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு அவரை பெயருக்கு வரவேற்றனர்.

யார் அவர்?

யார் அவர்?

பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள 8 பெண்களில் அடுத்த ஓவியா யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாஷிகாவிடம் ஓவியா போன்று அப்பாவித்தனம் இருந்தாலும் துணிச்சல் இல்லை. இப்போ தானே நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது போகப் போகப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X