பிக் பாஸ் ஏன் ஆர்த்தியை அழைத்து வந்திருக்கிறார் தெரியுமா?

By Siva

சென்னை: மும்தாஜே காப்பி இதில் அவர் யுக்தியை பிக் பாஸ் காப்பியடித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மும்தாஜ் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனில் டைட்டிலை வென்ற நடிகை ஷில்பா ஷிண்டேவை காப்பியடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் மும்தாஜின் யுக்தியை காப்பியடித்துள்ளார்.

யுக்தி

யுக்தி

தனக்கு போட்டி என்று யாரை நினைக்கிறாரோ அவர்களை தன் அருகிலேயே வைத்துக் கொள்வார் மும்தாஜ். அதாவது எதிரிகளை மிக அருகில் வைத்து பாசம் காட்டி அவர்களை யோசிக்கவே விட மாட்டார். ஐஸ்வர்யா தான் செய்யும் தவறுகளை உணராமல் தொடர்ந்து அராஜகம் செய்ய மும்தாஜே காரணம் எனலாம். ஐஸ்வர்யா தனியாக அமர்ந்து தனது தவறுகளை யோசித்து திருத்திக் கொள்ள மும்தாஜ் நேரம் கொடுப்பதே இல்லை.

பச்சா

பச்சா

ஐஸ்வர்யா தனியாக அமர்ந்து யோசிப்பதை பார்த்தாலே மும்தாஜ் உடனே அவர் அருகில் சென்று மேரி பேட்டி, பச்சா என்று பாச மழை பொழிந்து அவரின் சிந்தனையை மாற்றிவிடுவார். யாஷிகாவையும் அப்படித் தான் தனது பாச வலையில் சிக்க வைத்து வெளியேற விடாமல் வைத்துள்ளார் மும்தாஜ். இது அவரின் யுக்தி என்று கூட சொல்லலாம்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸை ட்விட்டரில் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவின் அம்மாவை பிக் பாஸின் மாமியார் என்றார். ஐஸ்வர்யாவுக்கே டைட்டில், வீடு, பிக் பாஸ் என்று அசிங்கப்படுத்தினார். இதை பார்த்த பிக் பாஸ் மும்தாஜின் யுக்தியை பின்பற்றி ஆர்த்தியை தன் கண் பார்வையில் வைக்க முடிவு செய்தார்.

ஒரு வாரம்

ஒரு வாரம்

பிக் பாஸை கிழித்து தொங்கவிட்ட ஆர்த்தி கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தார். என்னடா என்று பார்த்தால் பிக் பாஸ் 2 வீட்டிற்குள் அவரை அனுப்பி வைத்துவிட்டார்கள். தன் கண் பார்வையிலேயே இருந்தால் ஆர்த்தி எப்படி தன்னை கழுவி ஊத்தி உண்மையை எல்லாம் உலகிற்கு சொல்ல முடியும். வாரேவா, செம ஐடியா பிக் பாஸ். முன்னாள் போட்டியாளரான காஜலும் ரகசியத்தை எல்லாம் சொல்கிறாரே அப்போ அவரையும் அழைத்து வந்து வீட்டிற்குள் அடைத்துவிடுவீர்களா பிக் பாஸ்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X