போன் ஒயர் பிஞ்சு போனது தெரியாமல் வீடியோ வெளியிட்டு அசிங்கப்பட்ட பிக் பாஸ்
சென்னை: போன் ஒயர் பிஞ்சு போச்சு பிக் பாஸ். இது தெரியாமல் நீங்க வேறு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
பிக் பாஸ் 2 வீட்டிற்கு ஆரவ் வந்துள்ளார். அவரும் ஒரு வாரம் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசன் போட்டியாளர்களை பார்த்து கடுப்பான நிலையில் முதல் சீசன் போட்டியாளர்களை பார்த்தால் நிகழ்ச்சி பார்க்கும் திருப்தி ஏற்படுகிறது.
ஆரவின் வருகையை பார்த்து மகிழ்ச்சி அடைவோம் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சினேகன்
சினேகன் கோபப்பட்டு பேசுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆரவ் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்திருப்பது போன்று காட்டுகிறார்கள். கடந்த சீசனிலும் இதையே தான் செய்தார் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்க்
ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்ல தண்ணீர் டாஸ்க் கொடுத்துள்ளனர். ஒரு கண்ணாடி கோப்பையில் தண்ணீரை ஊற்றி அது சிந்தாமல் நடக்க வேண்டும். இந்த டாஸ்க் குறித்து ஆரவ் விளக்கிக் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
இதுவும் காப்பியா பிக் பாஸ்? தற்போது எல்லாம் நீங்கள் எந்த வீடியோ வெளியிட்டாலும் அது காப்பியா என்பதை தேடிக் கண்டுபிடிப்பதையே வேலையாக வைத்துள்ளனர் பார்வையாளர்கள். போன் ஒயர் பிஞ்சு போச்சு பிக் பாஸ்.
சகஜமப்பா
இந்த தண்ணீர் டாஸ்க் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் இருந்ததே என்று கூறி பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள். அசிங்கப்படுவது எல்லாம் பிக் பாஸுக்கு அல்வா சாப்பிடுவது போன்றாகிவிட்டது.
செம
பிக் பாஸ் வீட்டிற்கு ஆரவ் வருவதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கையாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











