உன் வக்கிரத்தை என்மேல மட்டும் கொட்டாத.. விக்கல்ஸ் விக்ரமை விளாசிய விஜே பாரு.. சண்டை ஸ்டார்ட்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பிராங்க் என்கிற பெயரில் நடக்கும் ஃபேக் சண்டையை விட போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் டைரக்ட் சண்டை தான் ரசிகர்களை அதிகமாகவே கவரும். இந்த சீசன் போட்டியாளர்களாக விஜே பாரு, திவாகர், பலூன் அக்கா, அகோரி கலையரசன் எல்லாம் ஏன் வந்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், விஜே பாரு, திவாகர் எல்லாம் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் நிலைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
யூடியூபரான விக்கல்ஸ் விக்ரம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் இருந்து அமைதியாக மற்றவர்களுக்கு சண்டை மூட்டி வந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவரது முகமூடி கழண்டு அவரும் தனது கோபத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார் என்றே தெரிகிறது.

விஜே பார்வதி வழக்கம் போல கத்தி கூப்பாடு போட்டு வக்கிரத்தை கொட்டாதீங்க என ஆண் போட்டியாளரின் இமேஜை டேமேஜ் செய்யும் அனைத்து முயற்சியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பதை தற்போது வெளியாகி இருக்கும் 2வது ப்ரோமோவில் ரசிகர்கள் விட்னஸ் செய்துள்ளனர்.
அடல்ட் கன் டென்ட்டுக்கு அடி: பிக் பாஸ் வீட்டில் விஜே பாரு - கம்ரூதினின் அடல்ட் கன்டென்ட்டை ஓவர்டேக் செய்யும் விதமாக ஆதிரை படுமோசமாக நடந்துக் கொண்டார் என அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து பார்சல் செய்து வெளியே அனுப்பி வைத்தனர். அரோரா சின்க்ளேர், விஜே பார்வதி எல்லாம் இன்னமும் வீட்டுக்குள் ஏன் இருக்கிறார்கள், அந்த வாட்டர்மெலான் திவாகரை முதலில் வெளியே அனுப்ப வேண்டும் என தவாக கட்சியினர் நடத்திய ஆர்பாட்டம் மற்றும் விஜய் சேதுபதியின் போஸ்டர்களை செருப்பால் அடித்தும் பிரச்னை பண்ணது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்விகளை எழுப்பியது. ஆனால், அதையெல்லாம் கடந்து உள்ளே தற்போது சண்டை வெடிக்க ஆரம்பித்துள்ளது.

பிராங்க் சண்டை இல்லை: விஜே பார்வதி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் இடையே தற்போது ஏற்பட்டுள்ள சண்டை பிராங்க் சண்டை கிடையாது என்றும் இப்போ தான் விக்கல்ஸ் விக்ரம் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
வக்கிரத்தை கொட்டாத: விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பார்வதி இடையே சண்டை வெடித்துள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 37வது நாளில் ஒளிபரப்பான 2வது ப்ரோமோவில், விஜே பார்வதி, "உன்னோட வக்கிரத்தை எல்லாம் என் மேல வந்து கொட்டாத" என விக்கல்ஸ் விக்ரமை விளாசியுள்ளார். பார்வதிக்கு ஆதரவாக கம்ரூதினும் பேசியதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











