பெத்த அம்மாவே பிக் பாஸ் தனலட்சுமியை வெறுக்குற அளவுக்கு என்ன பண்ணாரு?.. ஷாக் கொடுத்த திடீர் போஸ்ட்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் மக்கள் போட்டியாளராக கலந்து கொண்ட தனலட்சுமி நேற்று இரவு வெளியிட்டுள்ள போஸ்ட் அவரது ரசிகர்களையும் பிக் பாஸ் ஃபேன்ஸையும் ஷாக் ஆக்கியுள்ளது.
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான தனலட்சுமி அந்த செயலியை தடை செய்த நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தனது காமெடி ரீல்ஸ்களை போட்டு வந்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி தனது பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம். ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட தனலட்சுமி தற்போது தனது தாய் தன்னை ஒதுக்கி வைத்து விட்டதாக பரபரப்பான போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
பிக் பாஸ் தனலட்சுமி: விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த நிகழ்ச்சி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையுடன் நிறைவடைகிறது. கமல்ஹாசன் இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி உள்ளார். கடந்த 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தனலட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாக்கிங் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் போட்டியாளர்: பிக் பாஸ் சீசன் 6ல் புதிதாக மக்கள் போட்டியாளர் என்கிற கான்செப்ட்டை விஜய் டிவி அறிமுகம் செய்தது. அதன் மூலம் திருநங்கை ஷிவின் கணேசன் மற்றும் தனலட்சுமி இருவரும் தேர்வானதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் தனலட்சுமிக்கு கிடைத்த வரவேற்பு போக போக எதற்கெடுத்தாலும் அவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்த நிலையில், அவருக்கு கிடைக்காமல் போனது. மேலும், கோபக்காரி என்கிற முத்திரை குத்தப்பட்டு தனலட்சுமிக்கு எதிரான நெகட்டிவிட்டி அதிகம் பரவ ஆரம்பித்து விட்டது.
கண்கலங்கி அழுத தனலட்சுமி: 'வாழ்க்கையின் முடிவு மரணம் என கடந்த ஆண்டு திடீரென மனசு கஷ்டத்துடன் கண்கலங்கி அழுவது போன்ற வீடியோ ஒன்றை தனலட்சுமி பதிவிட அச்சச்சோ வாய்ப்பு கிடைக்காமல் இப்படி கஷ்டப்படுகிறாரா என பலரும் வருத்தம் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த போஸ்ட்டை திடீரென டெலிட் செய்து விட்டார். அடிக்கடி இப்படி தனக்கு வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தை வெளிப்படுத்தி வந்த தனலட்சுமி தற்போது தன்னுடைய அம்மாவே தன்னை தள்ளி வைத்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.
தள்ளி வைத்த அம்மா: பிக் பாஸ் தனலட்சுமிக்கும் அவருடைய அம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்றே சரியாக சொல்லவில்லை. ஆனால், இனிமேல் தன்னுடைய பெயரை தனலட்சுமி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்றும் தனக்கும் தனலட்சுமிக்கும் சம்பந்தமே இல்லை என லீகல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தனலட்சுமி நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
காதல் விவகாரமா?: அம்மாவுக்கு பிடிக்காத யாரையாவது தனலட்சுமி காதலித்து வருகிறாரா? அதனால் இந்த பிரச்சனை வெடித்துள்ளதா? அல்லது அவருடைய அம்மாவுக்கு பிடிக்காத ஏதோ ஒரு பெரிய விஷயத்தை தனலட்சுமி செய்ததால் தான் இப்படி அவரை விலக்கி வைத்து விட்டாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமா இரு தனா நாங்க இருக்கோம் என தனலட்சுமியின் தீவிர ரசிகர்களும் நண்பர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். என்ன பிரச்சனை என்பதை சொல்ல விரும்பவில்லை என தனலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











