இடுப்போரம் மச்சம் காட்டவா.. மனசுல திரிஷான்னு நினைப்பு.. பிக் பாஸ் பிரபலத்தை கலாய்த்த ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தனலட்சுமி அடுத்து என்ன செய்கிறார் என்று பார்த்தால் தொடர்ந்து பழையபடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். சீரியல் மற்றும் சினிமா என பெரிதாக வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏற்கனவே முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பெண்களுக்கே அல்வா தான் கிடைத்திருப்பது தெரிய வந்து தன்னுடைய முயற்சிகளை தொடர்ந்து வருகிறார்.

திருப்பாச்சி படத்தின் கிளைமேக்ஸ் பாடலான "அப்பன் பண்ண தப்புல" பாடலுக்கு திரிஷா மாதிரியே டிரெஸ் பண்ணிக் கொண்டு நடனமாட வீடியோவை தற்போது தனலட்சுமி வெளியிட்ட நிலையில் அதற்கு கீழ் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Bigg Boss Dhanalakshmi gets trolled for her Tirupachi dance video

பிக் பாஸ்: விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த நிகழ்ச்சி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையுடன் நிறைவடைகிறது. கமல்ஹாசன் இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி உள்ளார். கடந்த 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தனலட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்கள் போட்டியாளர்: பிக் பாஸ் சீசன் 6ல் புதிதாக மக்கள் போட்டியாளர் என்கிற கான்செப்ட்டை விஜய் டிவி அறிமுகம் செய்தது. அதன் மூலம் திருநங்கை ஷிவின் மற்றும் தனலட்சுமி இருவரும் பங்கேற்றனர். ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமிக்கு ஏகப்பட்ட சப்போர்ட்டுகள் கிடைத்தது. ஆனால், போக போக எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார் என்கிற முத்திரை குத்தப்பட்டு தனலட்சுமிக்கு எதிரான நெகட்டிவிட்டி அதிகம் பரவ ஆரம்பித்து விட்டது.

சோகமான போஸ்ட்: 'வாழ்க்கையின் முடிவு மரணம் என கடந்த ஆண்டு திடீரென மனசு கஷ்டத்துடன் கண்கலங்கி அழுவது போன்ற வீடியோ ஒன்றை தனலட்சுமி பதிவிட அச்சச்சோ வாய்ப்பு கிடைக்காமல் இப்படி கஷ்டப்படுகிறாரா என பலரும் வருத்தம் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த போஸ்ட் டிரெண்டாக தொடங்கியதும் அதை டெலிட் செய்து விட்டார்.

இடுப்போரம் மச்சம் காட்டவா: விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற "அப்பன் பண்ண தப்புல" பாடலில் வரும் "இடுப்போரம் மச்சம் காட்டவா" வரிகளுக்கு திரிஷா போலவே பாவாடை தாவணியில் நடனமாடிய வீடியோவை பிக் பாஸ் தனலட்சுமி வெளியிட்டுள்ளார்.

திருப்பாச்சி vs வெறுப்பாச்சி: திருப்பாச்சி படத்தோட பாட்டை பார்க்கும் போதெல்லாம் இனிமேல் இந்த கன்றாவி தானே நினைவுக்கு வரும் என நெட்டிசன்கள் திருப்பாச்சி வெறுப்பாச்சி என கலாய்த்து வருகின்றனர். இப்படியெல்லாம் ஆடத் தெரியாமல் ஆட்டம் போட்டால் எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்காது என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X