ஆத்தி.. ஜப்பானில் பல பேருடன் நிர்வாணமாக குளித்த பிக் பாஸ் பிரபலம்.. அவரே வெளியிட்ட போஸ்ட்டை பாருங்க!

சென்னை: தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து மருத்துவராக வலம் வந்த ஐக்கி பெர்ரி ராப் இசை கலை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக வெள்ளைக்கார பெண் போலவே மாறிவிட்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்ற அவர் ஏகப்பட்ட சுயதீன பாடல்களை உருவாக்கி வருகிறார். விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் பொதுவாக அடிக்கடி தாய்லாந்து, துபாய் என வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருவது வழக்கம்.

டிடி நீலகண்டன் ஐரோப்பா நாடுகளுக்கு எல்லாம் டூர் அடித்து ஏகப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். அவரது பிகினி போட்டோ வெளியான போதே ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆனார்கள்.

Bigg Boss Tamil Iykki Berry Television

இந்நிலையில், ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள ஐக்கி பெர்ரி அங்கே ஓபன் பாத்ரூமில் பலருடன் நிர்வாணமாக குளித்த அனுபவத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டாகவே வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Tamil Iykki Berry Television

நிர்வாண கலாச்சாரம்: பல நாடுகளில் நிர்வாணம் என்பது சாதாரண ஒன்றாகவே மாறிவிட்டது. நிர்வாணமாக ஊர்வலங்கள் செல்வது, போராடுவது, படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிப்பது என அந்த விஷயத்தை பொருட்படுத்தாமல் சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். ஆஸ்கர் விருது வென்ற படங்களிலும் நிர்வாணக் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐக்கி பெர்ரியும் நிர்வாணமாக குளித்த அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.

Bigg Boss Tamil Iykki Berry Television

ஜப்பானில் ஜப்பானியராக: பாம்பு திங்கிற ஊருக்கு சென்றால் நடு துண்டு நம்ம துண்டு என உட்கார்ந்து உண்ண வேண்டும் என பழமொழி கூறுவார்கள். அதே போல ஜப்பானுக்குச் சென்ற தஞ்சாவூர் பெண்ணான ஐக்கி பெர்ரி ஜப்பானியராகவே மாறிவிட்டேன் என்றும் அங்கே உள்ள பொது பாத்ரூமில் மற்ற பெண்களுடன் நிர்வாணமாக குளித்த அனுபவம் ஓ மை காட் வேறலெவலில் இருந்தது. இன்னும் 1000 முறை கூட இப்படி குளிப்பேன் என பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Tamil Iykki Berry Television

ஆரம்பத்தில் கூச்சம்: முதலில் மற்றவர்களுடன் நிர்வாணமாக எப்படி நிற்பது என்றும் குளிப்பது என்றும் ரொம்பவே பயந்தேன், கூச்சப்பட்டேன். ஆனால், அதன் பின்னர், ஒரு தில்லுடன் இறங்கி இதையும் ட்ரை பண்ணிடலாம் என பண்ணிப் பார்த்தேன். அங்கே யாருமே நிர்வாணத்தை அசிங்கமாகவோ ஆபாசமாகவோ பார்க்கவில்லை என்பதை புரிந்துக் கொண்ட பின்னர் அந்த அனுபவம் சிறப்பாக இருந்தது என பாத்டப்பில் குளித்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். நல்லவேளை அப்படியே நிர்வாண போட்டோவாக ஷேர் செய்யாமல் கிராப் செய்யப்பட்ட புகைப்படத்தையே ஷேர் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X