காதலித்து பெண்களை கழற்றிவிடுவது எப்படி?: டியூஷன் எடுக்கும் "க.பா." கவின்
Recommended Video
சென்னை:கவின் ஒரு ஃபிராடு என்பதை தெரிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்வது என்றால் அது கடலை பார்ட்டி(க.பா.) கவின் தான். ஒரே நேரத்தில் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி என்று ரவுண்டு கட்டி கடலை போடுகிறார். அதிலும் குறிப்பாக பெண்களுடன் சேர்ந்து புல்வெளியில் படுத்துக் கொண்டு அவர் கடலை போட்டதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பானார்கள்.
இந்நிலையில் கவின் பற்றிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கவின்
காதலில் சொதப்புவது எப்படி என்று மோகன் வைத்யா கேட்க, காதலித்து விட்டு எஸ்கேப் ஆகணும் என்று முடிவு செய்துவிட்டால் அவங்க நம் மீது பழி போடும் முன்பு நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கவின் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு காதலில் சொதப்புவது ஓகே, ஆனால் 2, 3 பேரை காதலிக்கும்போது சொதப்பினாயே அது எப்படி என்று சேரன் கவினிடம் கேட்டுள்ளார்.

பெண்கள்
முக்கியமான விஷயம் என்னவென்றால் 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு லவ் பண்ணக் கூடாது என்று கவின் கூறியதை கேட்டு லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு. சாக்ஷி முகத்திலும் சிரிப்பு தான் உள்ளது. ஆனால் அபிராமி தான் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டுள்ளார். கவின் சொன்ன பதிலை கேட்ட சேரன் மாட்டிக்கிட்டியா என்று கேட்க அநேகமா இந்த வீட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கிறேன் என்றார்.

லாஸ்லியா
கவின் அளித்த பதிலை கேட்ட லாஸ்லியா ஆர்மிக்காரர்களோ அடப்பாவி தலைவியை கரெக்ட் பண்ணிட்டியா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேண்டாம் கவின், லாஸ்லியா ஒரு அப்பாவி, நீ ஒரு ஃபிராடு அந்த பிள்ளையை விட்டுடு என்று லாஸ்லியா ஆர்மி எச்சரித்துள்ளது. லாஸ்லியா, கவினை நம்பாதீங்க, அந்த ஆள் நல்லவன் இல்லை என்று ஆர்மிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சாபம்
90ஸ் கிட்ஸுகள் ஒரு பெண் கிடைக்காமல் அல்லாடும் நிலையில் இந்த கவின் ஒரே நேரத்தில் 2, 3 பெண்களை உஷார் செய்வதை பார்த்து அவர்கள் எல்லாம் சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரிடம் வேண்டுமானாலும் சாபம் வாங்கலாம் ஆனால் மொரட்டு சிங்கிள்ஸாக இருக்கும் 90ஸ் கிட்ஸிடம் மட்டும் சாபம் வாங்கவே கூடாது கவின். ஜாக்கிரதை.


Click it and Unblock the Notifications











