2வது திருமணத்தை முடித்த அபிஷேக் ராஜா.. மணக்கோலத்தில் மனைவியுடன் எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை: யூடியூப் விமர்சகராக இருந்து அபிஷேக் ராஜா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார். ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்த அபிஷேக் ராஜா இன்று தனது இரண்டாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Fully Filmy யூடியூப் சேனலில் ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா அதன் பின்னர் ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து தனியாக விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். சினிமா பையன் என்கிற அடைமொழியுடன் புதிய படங்களை விமர்சித்து வந்த அபிஷேக் ராஜாவுக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை.

ஏகப்பட்ட பிரச்சனைகளும் சண்டைகளும் வெடித்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார். தான் ஒரு 'பிரவுடான டைவர்ஸி' என்றும் பேட்டிக் கொடுத்த அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட அலப்பறைகளையும் செய்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.
அபிஷேக் ராஜா திருமணம்: யூடியூப் விமர்சகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா இன்று தனது காதலி சுவாதி நாகராஜன் என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் சினிமா பையனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல் மனைவியுடன் விவாகரத்து: கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அபிஷேக் ராஜா. ஆனால், அந்த திருமணம் அவர்கள் இருவருக்குமே சரியாக அமையவில்லை. இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட கருத்து முரண்பாடுகள் வெடித்து வந்த நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பிக் பாஸ் பிரபலம்: ராஜு ஜெயமோகன், பிரியங்கா தேஷ் பாண்டே, அமீர், பாவனி, இமான் அண்ணாச்சி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக அபிஷேக் ராஜா பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்த்தது கிடையாது என பேசிய அபிஷேக் ராஜா கமல்ஹாசன் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் பேசிய பழைய வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். 2 வாரத்தில் எவிக்ட்டான அபிஷேக் ராஜாவுக்கு மீண்டும் வைல்டு கார்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அதிலும் அவர் ஷைன் ஆகவில்லை.
இயக்குநர் அபிஷேக் ராஜா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குநராக போராடி வந்த அபிஷேக் ராஜா 'ஜாம் ஜாம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அந்த படம் உருவாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து இசை ஆல்பம் ஒன்றையும் இவர் இயக்கியுள்ளார்.

திருமண புகைப்படங்கள்: சுவாதி நாகராஜன் எனும் பத்திரிகையாளரை காதலித்து வந்த அபிஷேக் ராஜா இன்று அவரை திருமணம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அபிஷேக் ராஜாவின் வாழ்க்கை இனிமேல் ஹேப்பியாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர். விரைவில் அவர் இயக்கியுள்ள ஜாம் ஜாம் படமும் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











