ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. புது லுக்கில் பிக் பாஸ் அனிதா சம்பத்.. ரொம்ப க்யூட்டா இருக்காரே!

சென்னை: செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் சில படங்களில் நடித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அனிதா சம்பத்துக்கு சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

டிராவல் செய்வது, ரீல்ஸ் போடுவது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார். அனிதா சம்பத்தின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Bigg Boss fame Anitha Sampath new hairstyle look vows fans

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அன்பே வா படத்தில் இடம் பெற்ற "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடலுக்கு பலரும் தற்போது ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த ட்ரெண்டில் அனிதா சம்பத்தும் இணைந்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம்: சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

10 லட்சம் ரசிகர்கள்: இன்ஸ்டாகிராமில் அனிதா சம்பத்தை இதுவரை ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஜாலியான ரீல்ஸ் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வீடியோக்களையும், சாகசங்கள் செய்யும் காட்சிகளையும் இவர் வெளியிட்டு வருகிறார்.

புதிய லுக்: அனிதா சம்பத் தற்போது தனது நீண்ட கூந்தலை பாதியாக வெட்டிக் கொண்டு புதிய லுக்கில் காட்சியளிக்கும் வீடியோவை "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடலுடன் சேர்த்து வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அனிதா சம்பத்தின் புதிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த லுக் சூப்பராக இருக்கிறது ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மணாலி ட்ரிப்: சம்மர் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தனது கணவருடன் சென்று கொண்டு மணாலி சுற்றுலா செல்ல போகிறேன். அதற்காகத்தான் இந்த புதிய கெட்டப் என ஹேர் கட் செய்த வீடியோவை வெளியிட்டு அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். விரைவில், மணாலியில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X