புது வீடு கட்டி மண் பானையில் பால் காய்ச்சிய பிக் பாஸ் அன்ஷிதா.. தன்னை எதிர்த்தவர்களுக்கு தரமான பதிலடி!
சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்காமல் இந்த முறை விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால், முடிந்தவரை சிறப்பாகவே மக்கள் செல்வன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்.
கமல்ஹாசனை போலவே சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போக அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் கடைசியாக வந்த ஏஸ் படமும் தோல்வியை தழுவியது. ட்ரெயின், தலைவன் தலைவி, பிசாசு 2 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

விஜய் சேதுபதியை தாண்டி கடந்த பிக் பாஸ் சீசனில் அதிகம் கவனிக்கப்பட்டவர்கள் என்றால் அது அர்னவ் மற்றும் அன்ஷிதா தான். செல்லம்மா சீரியலில் நடித்து அசத்திய அன்ஷிதா அர்னவை காதலித்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்கள். இந்நிலையில், தொடர்ந்து கடுமையாக உழைத்து தனது கனவு இல்லத்தை கட்டி முடித்திருக்கிறார் அன்ஷிதா.
சமீபத்தில் சந்தானம்: நடிகர் சந்தானம் சமீபத்தில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஓடவில்லை என்றாலும், சந்தானத்தின் கடன் தொல்லைகளில் இருந்து அவரை காப்பாற்றி விட்டது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராகவும் சந்தானம் மாறப் போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. சிம்புவுடன் இணைந்து அவர் எஸ்டிஆர் 49 படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் டிராப் ஆகிவிடும் சூழல் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

புது வீடு கட்டிய அன்ஷிதா: விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் பிரபலமாகி சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள சந்தானம் வீடு கட்டி குடிபுகுந்த நிலையில், விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த பிக் பாஸ் பிரபலமான அன்ஷிதாவும் புது வீடு கட்டி பால் காய்ச்சிய புகைப்படங்களை சற்றுமுன் வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
குட்டி சொர்க்கம்: பல கனவுகள், பல தடைகள், பல போராட்டங்களை கடந்து எனக்கான ஒரு குட்டி சொர்க்கத்தை உருவாக்கி உள்ளேன் என சந்தோஷத்துடன் தனது வீட்டில் நடைபெற்ற புதுமனை புகுவிழா புகைப்படங்களை பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா ஷேர் செய்துள்ளார். அர்னவை அன்ஷிதா பிரேக்கப் செய்து பிரிந்த நிலையில், இன்னொரு பிக் பாஸ் பிரபலத்துடன் அவர் நட்பாக பழகி வருகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அன்ஷிதா எதையும் அறிவிக்கவில்லை.
வாழ்த்தும் நண்பர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதாவுடன் போட்டியாளர்களாக பங்கேற்ற சுனிதா கோகோய், சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் உள்ளிட்ட பலர் அன்ஷிதா புது வீடு கட்டி குடி புகுந்ததற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் அன்ஷிதாவின் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். தனக்காக உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும், தனக்கு கஷ்டத்தை கொடுத்த எதிரிகளுக்கும் நன்றி என்றும் அவர்களால் தான் நான் ஸ்ட்ராங்கான பெண்ணாக மாறினேன் என்றும் அன்ஷிதா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











