அனிதாவும் அர்ச்சனாவும் சேர்ந்து இன்னாம்மா குத்தாட்டம் போடுறாங்க. வேற லெவலில் வைரலாகும் வீடியோக்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு அன்பு கேங்கை உருவாக்கி ஆட்டத்தையே வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்ற அர்ச்சனா தனது தங்கை அனிதாவுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்.

பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா மற்றும் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் இணைந்து ஆடிய வீடியோக்கள் வைரலான நிலையில், அர்ச்சனா இப்படி ஆட தொடங்கி இருக்கிறாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சேலை கட்டி தங்கையுடன் செம நடனம் ஆடும் அர்ச்சனாவின் டான்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் சக்கைப் போடு போட்டு வருகின்றன.

அன்பு அர்ச்சனா

அன்பு அர்ச்சனா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அர்ச்சனா கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸுக்கும் அன்பு அன்னையாக மாறினார். அன்பு தான் ஜெயிக்கும் என நிஷா உடன் சேர்ந்து அவர் விளையாடிய கேம் ரசிகர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

பாத்ரூம் டூர்

பாத்ரூம் டூர்

அர்ச்சனாவுக்கு எதிராக ஏகப்பட்ட மீம்கள் மற்றும் ட்ரோல்கள் கடந்த சீசனில் பறந்தன. அதன் பின்னர் மகள் ஸாராவுடன் இணைந்து அர்ச்சனா போட்ட யூடியூப் வீடியோக்கள் வேற லெவலில் வைரலாகின. அதிலும், அந்த பாத்ரூம் டூர் வீடியோ பங்கமாக கலாய்க்கப்பட்டது.

மூளையில் பிரச்சனை

மூளையில் பிரச்சனை

பேச்சாற்றல் அதிகம் கொண்ட தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு திடீரென மூளையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அர்ச்சனாவுக்கு இப்படியொரு நிலைமையா? என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் துடித்துப் போய் அவர் பூரண குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். அர்ச்சனாவும் கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்துள்ளார்.

டாக்டர் படத்தில் நல்ல ரோல்

டாக்டர் படத்தில் நல்ல ரோல்

பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஸாரா இருவருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் சிறப்பான ரோலை இயக்குநர் நெல்சன் வழங்கி இருந்தார். கடத்தப்பட்ட சிறுமியாக ஸாராவும் மகளை தொலைத்து விட்டு பரிதவிக்கும் தாயாக அர்ச்சனாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.

தங்கையுடன் டான்ஸ்

தங்கையுடன் டான்ஸ்

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ள அர்ச்சனா தனது தங்கை அனிதா சந்தோக்கி உடன் இணைந்து நடனம் ஆடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். டாக்டர் தீம் மியூசிக்கிற்கு ஆட ஆரம்பித்த இருவரும் தொடர்ந்து பல வீடியோக்களை போட்டு வருகின்றனர்.

ஐ லவ் யூ டூ பாடலுக்கு

ஐ லவ் யூ டூ பாடலுக்கு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ஐ லவ் யூ டூ பாடலுக்கு தனது தங்கையுடன் சேலையில் செம டான்ஸ் ஆடிய வீடியோவை சமீபத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்தார்.

டும் டும் பாடல்

டும் டும் பாடல்

இந்நிலையில், தற்போது விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான எனிமி படத்தில் இடம்பெற்று இணையத்தில் வைரலாகி வரும் டும் டும் பாடலுக்கு அசத்தல் நடனமாடி கலக்கி உள்ளார் அர்ச்சனா. பிக் பாஸ் பிரபலமான கேப்ரியல்லா உள்ளிட்ட பலர் இந்த வீடியோவுக்கு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X