ஐம் சாரி ஐயப்பா டூ ஐ லவ் யூ செல்லப்பா.. காதலரை உலகிற்கு காட்டிய இசைவாணி!
சென்னை: ஆண்கள் மட்டுமே பாடி வந்த கானா பாடல்களை பெண்களும் பாடலாம் என்ற புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் கானா பாடகி இசைவாணி.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர், தற்போது தனது காதலரை சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த கியூட் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இசைவாணிக்கு சிறுவயதிலிருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. பொதுவாக ஆண்கள் மட்டுமே பாடும் கானா இசைத் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து எளிய மக்களின் வாழ்வியலையும், சமூக அக்கறையுள்ள கருத்துகளையும் தனது கானா பாடல்கள் மூலம் கணீரென்று பாடி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அவரது பாடல்கள் சமூக அக்கறை மற்றும் மக்கள் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் அமைந்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து இசைவாணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பாடகி இசைவாணி: இயக்குநர் Pa. Ranjith உருவாக்கிய இசைக்குழுவில் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ள இசைவாணி, தனது தனித்துவமான குரலாலும் மேடை நிகழ்ச்சிகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக " ஐம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா தப்பா" என்ற பாடலை பாடி இருந்தார். இது ஐயப்பன் மற்றும் இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பது. அந்தப் பாடலை எதிர்த்து சில இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் காவல் நிலையத்தில் இசைவாணி புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களிலும் பலரும அவரை கடுமையாக விமர்சித்தனர்.

காதலரை அறிமுகம் செய்தார்: சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இசைவாணி. பிபிசிவெளியிட்ட உலகின் 100 செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலிலும் இவர் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இசைவாணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இசைவாணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன், எப்போது திருமணம்? என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications