குட்டியானை வண்டியை ஓட்டிக்கிட்டு.. வாட்டர் கேன் போடுறாரே பிக் பாஸ் கேப்ரில்லா.. அதுவும் சேலையணிந்து!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நடித்து வரும் பிக் பாஸ் பிரபலமான கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோடு ஆட்டோ வண்டியை ஓட்டும் வீடியோவை சற்றுமுன் ஷேர் செய்து தனது கடுமையான உழைப்பை பற்றிய பதிவை போட்டுள்ளார். கேப்ரில்லாவின் ரசிகர்கள் அவரது வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
9 வயதிலேயே ஜோடி ஜூனியர் நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடனமாடி அசத்தினார். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு டைட்டிலை தட்டித் தூக்கினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளாராக பங்கேற்ற கேப்ரில்லா நமக்கு டைட்டில் எல்லாம் கிடைக்காது, வந்த வரை லாபம் என புத்திசாலியாக செயல்பட்டு 5 லட்சம் பணப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை சீரியல்களில் பிசியான நடிகையாக மாறியுள்ள அவர் ஈரமான ரோஜாவே 2 மற்றும் மருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
10 நிமிஷத்துல லோடு ஆட்டோ ஓட்டினேன்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியலில் பிசியாக நடித்து வருகிறார் கேப்ரில்லா. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது தனுஷின் 3 படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், சென்னையில் ஒருநாள், அப்பா படங்களில் நடித்தார். கடைசியாக வருணன் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்திலும் வாட்டர் கேன் போடுபவர்களின் கதையை இயக்குநர் படமாக்கியிருந்தார். இந்நிலையில், மருமகள் சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லா வெறும் 10 நிமிடத்தில் லோடு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டு ஓட்டினேன் என வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
20 முதல் 30 வாட்டர் கேன் தூக்கினேன்: "வாட்டர் கேன் போட வந்தேன்" என்பது போல சின்னத்திரை நடிகை கேப்ரில்லா தானே லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்து வாட்டர் கேன்களையும் தூக்கிக் கொண்டு போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அடிக்கிற வெயிலில் இதையெல்லாம் சேலை அணிந்துக் கொண்டு கேப்ரில்லா பண்ணுவதை பார்த்த ரசிகர்கள் நடிப்புக்காக ரொம்பவே கஷ்டப்படுறீங்க சூப்பர் என பாராட்டி வருகின்றனர்.
கவர்ச்சி போட்டோஷூட் மட்டுமே: சில நடிகைகள் கவர்ச்சியாக போட்டோஷூட் மட்டுமே போட்டுக் கொண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஆனால், நீங்க அப்படி இல்லாமல் உங்கள் நடிப்புத் திறமையும் எந்தவொரு கஷ்டமான சூழலையும் சமாளிக்கும் திறமையையும் காட்டுறீங்க வெரி குட் என ரசிகர்கள் கேப்ரில்லாவுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
குழந்தைன்னு சொல்ல மாட்டாங்க: ரொம்ப வருஷமாகவே கேப்ரில்லா தனது தோற்றத்தை பார்த்து பலரும் குழந்தை என்றே தன்னை அழைத்து வருகின்றனர் என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கூட புலம்பிக் கொண்டிருந்தார். ஆனால், சமீப காலமாக சேலை அணிந்து சீரியலில் பொறுப்பான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அவரை இனிமேல், யாரும் அப்படி அழைக்கமாட்டார்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











